புதுக் கவிதைகள் - நீ எனக்கு வேண்டும்
- எஸ். ஆன்றோ மலருக்கு வாசம் வேண்டும் மீனுக்குப் புனல் வேண்டும் தேனுக்குத் தித்திப்பு வேண்டும் - என் தேவதையை நீ எனக்கு வேண்டும். வானுக்குக் கூர்மை வேண்டும் யாழுக்கு இசை வேண்டும் தோளுக்கு வீரம் வேண்டும் - அடி தோகையே நீ எனக்கு வேண்டும். கடலுக்கு அலை வேண்டும், உடலுக்கு உயிர் வேண்டும் உதவிக்குக் கரம் வேண்டும் - என் உயிரே நீ எனக்கு வேண்டும். மயிலுக்கு தோகை வேண்டும் குயிலுக்கு கவி வேண்டும். வெயிலுக்கு நிழல் வேண்டும் -அடி வெண்ணிலவே நீ எனக்கு வேண்டும். நட்புக்குத் தோழன் வேண்டும், நாட்டிற்கு வளம் வேண்டும், காட்டிற்கு வேங்கை வேண்டும் - என் கிளியே நீ எனக்கு வேண்டும். பெண்ணுக்கு அணி வேண்டும் பாலுக்கு சுவை வேண்டும் பாட்டுக்கு தாளம் வேண்டும் - அடி பாவையே நீ எனக்கு வேண்டும் தீபத்திற்கு ஒளி வேண்டும் சிலம்பிற்கு இளங்கோ வேண்டும் சபைக்குத் தமிழ் வேண்டும் - என் சர்க்கரையே நீ எனக்கு வேண்டும். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீ எனக்கு வேண்டும் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - வேண்டும், எனக்கு