புதுக் கவிதைகள் - என் உயிர்த் தமிழே!
- டி. சுப்பிரமணியபிள்ளை காலையிலும் மாலையிலும் கனித்தமிழே நினைப்பேன்! கடமையிலும் உடைமையிலும் கனித்தமிழே நினைப்பேன்! வேலையிலும் ஓய்வினிலும் இனித்தமிழே நினைப்பேன்! வெற்றிகிட்டும் போதிலும் பைந்தமிழே நினைப்பேன்! உயர்வினிலும் தாழ்வினிலும் உயர்த்தமிழே நினைப்பேன்! உறங்கையிலும் விழிக்கையிலும் உயிர்த்தமிழே நினைப்பேன்! கிறங்கிவிழ நேர்ந்தாலும் தமிழ்ச்சொல்லி வீழ்வேன்! கேண்மைமிகும் தமிழாலே வீழ்ந்திடினும் எழுவேன்! வறுமையிலும் வளமையிலும் முத்தமிழை மறவேன்! வரும்துன்பம் அத்தனையும் என்தமிழால் கடப்பேன்! இசைகேட்கும் போதெல்லாம் தாய்த்தமிழே கேட்பேன்! இவ்வுலகின் யாவரையும் தமிழ்ச்சொல்லி மதிப்பேன்! வாழ்ந்தநாள் ஒவ்வொன்றும் தமிழாக வாழ்ந்தேன்! வரும்நாட்கள் எல்லாமும் தமிழாக வாழ்வேன்! தாழ்ந்துநான் நின்றதில்லை தலைநிமிர்ந்தே நின்றேன்! தமிழ்தந்த பண்பாட்டால் தரணியையும் வெல்வேன்!! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என் உயிர்த் தமிழே! - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - நினைப்பேன்