புதுக் கவிதைகள் - விடுதலைப் பெண்ணே விரைந்து வா
- எஸ். ஜெய்காந்த் நாம் ஆடை உடுத்திய அலங்காரப் பொம்மைகளல்ல சோடை போவதற்கு வீட்டின் தலைப்பெண்கள் ஆம் விடுதலைப் பெண்கள் தடை தரும் மேடுகளைத் தகர்த்தெறிவோம் குமரியில் விவேகானந்தருக்குப் பாறைதந்தவர்கள் குமுறியழும் நம் விவேகத்திற்கு மட்டும் பாதை தரவில்லை. பற்பசை விளம்பரம் போல் நம் கற்பையும் வெளிச்சம் போடும் நிர்வாணக் குவியல்களை மேடை போட்டு முடக்குவோம். மோகத்தின் வேகம் முப்பது நாளென வேலியிட்டவர்கள் நம் வேலைத் தாகத்திற்கும் இடைவெளி முப்பதென ச(க)ட்டம் போடுவார்கள் பெண்மையை வரமென்றவர்களே நம்மை வரதட்சணைக்கு வரட்டியாக்கியது போதும் ஆசிரமச் சாவுகள் அஸ்தமிக்கட்டும் நீர்க்கோலம் போடுவதைவிட்டு நீதி கேட்டுத் தடுப்போம் கல்வி சாலைகளை கலவிச் சாலைகளாக்கும் கொடுமையை விரட்ட வேண்டாமா? விடுதலைப் பெண்ணே விரைந்து வா இங்கே பவித்திரங்களுக்கு பாதுகாப்பில்லை வேலியை பயிரைப் பலியெடுக்கும் கொடுமை ஆம் விசாரணை விரசங்களை விரட்டியடிப்போம் விடுதலைப் பெண்ணே விரைந்து வா நாம் வீட்டின் தலைப்பெண்கள் விடுதலைப் பெண்கள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைப் பெண்ணே விரைந்து வா - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - விடுதலைப்