புதுக் கவிதைகள் - வரவேற்பறை
- பழநி பாரதி கதவு திறந்ததும் காற்றின் விரல்பட்டுச் சிணுங்குகிறது தொங்கும் அழைப்புமணி பணமூட்டைகளைச் சுமக்கும் குபேரன்... பக்கத்திலேயே கை தூக்கி நிற்கிறார் சிரிக்கும் புத்தர் கண்ணாடித் தொட்டியில் தங்கமீன்களின் விளையாடல் வீட்டைச் சுற்றி ஒரே கூட்டம்... ஏலம் விட்டது நீதிமன்றம். நீதிமன்றம். நன்றி: ஆனந்த விகடன். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரவேற்பறை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -