பிரெட் சாப்ஸ்
தேவையானவை: உப்பு பிரெட் - 6 ஸ்லைஸ், மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், பூண்டு - 5 பல்,சின்ன வெங்காயம் - 6, கறிவேப்பிலை - 5 இலை, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள். பூண்டு, மிளகாயை விழுதாகஅரைத்தெடுங்கள். சின்ன வெங்காயத்தை நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக்காயவைத்து, பிரெட்டைப் பொரித்தெடுங்கள். பிறகு, கடாயில் எண்ணெயைக் காயவைத்துகறிவேப்பிலை, அரைத்த மிளகாய் விழுது, நசுக்கிய வெங்காயம் சேர்த்து, சுருள சுருளக்கிளறுங்கள். பச்சை வாசனை போனதும், உப்பு, 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கிளறி, பிரெட்டையும்போட்டு நன்கு கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரெட் சாப்ஸ், 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், உப்பு, Recipies, சமையல் செய்முறை