மஷ்ரூம் சாப்ஸ்

தேவையானவை: பட்டன் காளான் - 10, சின்ன வெங்காயம் - 10, நாட்டு தக்காளி - 2,கறிவேப்பிலை - 5, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.அரைக்க: மிளகு - அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - 1, பூண்டு - 6 பல், இஞ்சி- ஒரு துண்டு, தேங்காய் - ஒரு துண்டு.
செய்முறை: காளானை நான்கு துண்டுகளாக (சிறியதாக இருந்தால் இரண்டாக) நறுக்குங்கள்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைஸாகஅரைத்தெடுங்கள். 5 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, வெங்காயம், தக்காளிபோட்டு வதக்குங்கள். அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்குஎண்ணெய் கக்கி வரும் வரை கிளறுங்கள். பச்சை வாசனை போனபிறகு, காளானைப் போட்டுநன்கு கிளறி, காளான் வெந்து, எண்ணெய் கசிந்தவுடன் இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மஷ்ரூம் சாப்ஸ், 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், எண்ணெய், வெங்காயம், Recipies, சமையல் செய்முறை