பனீர் வறுவல்

தேவையானவை: பனீர் - 200 கிராம், குழம்பு மசாலா தூள் (கடைகளில் கிடைக்கும்) - ஒன்றரைடீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், அரிசிமாவு -அரை டீஸ்பூன், உப்பு (குழம்பு மசாலா தூளில் உப்பு இருக்கும் என்பதால்) - கால் டீஸ்பூன்,எலுமிச்சம்பழச் சாறு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பனீரை விரல் நீளத்துக்கு நறுக்கி தனியே வையுங்கள். மசாலாதூள், இஞ்சி-பூண்டுவிழுது, கார்ன்ஃப்ளார், அரிசிமாவு, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து நன்குபிசைந்துகொள்ளுங்கள். பஜ்ஜி மாவை விடக் கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். பனீரைஇந்தக் கலவையில் போட்டு, உடைந்துவிடாமல் பிரட்டி, எண்ணெயைக் காயவைத்து, நான்குநான்காகப் போட்டு நன்கு சிவக்கப் பொரித்தெடுங்கள். கவனிக்கவும்: எண்ணெய் நன்குகாயவேண்டும். இல்லையென்றால் மசாலா தனியாக, பனீர் தனியாகப் பிரிந்துவந்துவிடும். (குறிப்பு:அசைவச் சுவை பிடித்தவர்கள், குழம்பு மசாலாவுக்குப் பதிலாக ‘சிக்கன் 65’ மசாலா தூளைப்போடலாம்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பனீர் வறுவல், 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், மசாலா, உப்பு, குழம்பு, Recipies, சமையல் செய்முறை