க்ரீன் கறி வெஜ் கோப்ஃதா

தேவையானவை: (கோஃப்தாவுக்கு) உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, பட்டாணி -1 கைப்பிடி, பீன்ஸ் - 2, மைதா - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 1டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலா - அரை டீஸ்பூன்,மல்லித்தழை - சிறிது, உப்பு - ருசிக்கு, எண்ணெய் - தேவைக்கு, பிரெட் ஸ்லைஸ்- 2. அரைக்க: தேங்காய் - 1 மூடி, முந்திரி - 5 (இரண்டையும் ஒன்றாக அரைக்கவேண்டும்). புதினா - அரை கட்டு, மல்லித்தழை - 1 கைப்பிடி, இஞ்சி - 1 துண்டு,பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 6 (இவை அனைத்தையும் ஒன்றாக அரைக்கவேண்டும்). தாளிக்க: பட்டை - 1 துண்டு, லவங்கம் - 2, பெரிய வெங்காயம் - 2,எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள்.காய்கறிகளை பொடியாக நறுக்கி வேகவைத்து, தண்ணீரில்லாமல் வடித்துமசியுங்கள். அத்துடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்துபிசையுங்கள். சிறுசிறு உருண்டைகளாக உருட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்துஉருண்டைகளைப் பொரித்தெடுங்கள். கோஃப்தா ரெடி.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள். வெங்காயத்தைப்பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்துவெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் புதினா மசாலாவை சேர்த்துபச்சை வாசனை போக வதக்குங்கள். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்துகொதிக்கவிடுங்கள். பின்னர் தேங்காய், முந்திரி, விழுதை சேர்த்து 5 நிமிடம்கொதிக்கவிட்டு இறக்குங்கள். பரிமாறும் பொழுது உருளைக்கிழங்குகோஃப்தாக்களை அதில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு பரிமாறுங்கள்.விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான சைட் டிஷ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
க்ரீன் கறி வெஜ் கோப்ஃதா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, ஒன்றாக, எண்ணெய், Recipies, சமையல் செய்முறை