மிக்ஸ்டு வெஜிடபிள் ஃப்ரை

தேவையானவை: பச்சை காலிஃப்ளவர் (அல்லது வெள்ளை காலிஃப்ளவர்), கேரட், பீன்ஸ், கோஸ்,பேபிகார்ன், குடமிளகாய் (எல்லாம் சேர்ந்து)-அரை கிலோ, பச்சை மிளகாய்-3, பூண்டு-5 அல்லது6 பல், எண்ணெய்-3 டீஸ்பூன், பனீர்-100 கிராம்.
செய்முறை: பேபிகார்ன், பனீர் உட்பட எல்லாக் காய்களையும் சிறு துண்டுகளாக நறுக்குங்கள்.பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து நசுக்கிய பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, பிறகு காய்கறிகள், பனீரைச் சேர்த்து, தேவையானஉப்பு சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் முக்கால்பதம் வேகும்வரை வதக்கி இறக்கிப் பரிமாறுங்கள்.(விருப்ப மானவர்கள் கால்டீஸ்பூன் அஜினோமோட்டோ சேர்க்கலாம்)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிக்ஸ்டு வெஜிடபிள் ஃப்ரை, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, சேர்த்து, பச்சை, Recipies, சமையல் செய்முறை