பிரெட் பேரீச்சை டோஸ்ட்

தேவையானவை: உப்பு பிரெட்-10 ஸ்லைஸ், எண்ணெய்-4 டீஸ்பூன்.அரைக்க: மல்லித்தழை-அரை கட்டு, புளி-நெல்லிக்காய் அளவு, பேரீச்சம்பழம்-4 அல்லது 5, பச்சைமிளகாய்-2, உப்பு-தேவையான அளவு.
செய்முறை: மல்லித்தழையை நன்கு ஆய்ந்து, சுத்தம் செய்தபிறகு, மற்ற பொருட்களுடன் சேர்த்துநைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதை ஒவ்வொரு பிரெட் ஸ்லைஸின் மேலும் ஒருபக்கம் மட்டும் தடவுங்கள். தடவிய பக்கங்கள் சேர்ந்தாற்போல இருக்குமாறு ஒன்றின் மேல் என்றுவைத்து, ஸாண்ட்விச் போல செய்துகொள்ளுங்கள். சட்னி தடவாத வெளிப்பக்கத்தில் எண்ணெய்தடவி, சூடான தோசைக் கல்லில் நன்கு டோஸ்ட் செய்யுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரெட் பேரீச்சை டோஸ்ட், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, , Recipies, சமையல் செய்முறை