கடி ஜோக்ஸ் 90 - கடி ஜோக்ஸ்
ஒருவர் : எங்கே, இந்தக் கைதியை விசாரணை பண்ணுங்க பார்க்கலாம்.
மற்றொருவர் : டேய்! பாக்கெட்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கே ?
-***-
நீதிபதி : பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?
குற்றவாளி : உங்களை மாதிரிதாங்க எல்லோரும் எமாந்துடறாங்க.
-***-
ஒருவர் : இந்தியாவுக்கு ஹாட்ரிக்னா என்ன அர்த்தம் சொல்லு?
மற்றொருவர் : பந்துல 3 ரன் எடுக்கறதுதான்
-***-
ஒருவர் : சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.
மற்றொருவர் : எப்படிச் சொல்றீங்க ?
ஒருவர் : ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.
-***-
திருடன் : என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.
நீதிபதி : எப்படி ?
திருடன் : ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 90 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ஒருவர், மற்றொருவர், அக்கவுண்ட்ல, திருடன், கொள்ளை, நீதிபதி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை