கடி ஜோக்ஸ் 88 - கடி ஜோக்ஸ்
அமைச்சர் : அரசே, இவர்களிருவரும் உங்களை கோழை என்றும், புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசிய வாறு இருந்தனர்
அரசர் : ராஜ ரகசியத்தை வெளியிட்ட இவர்களை பாசறையில் அடை
-***-
ஒருவர் : மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?
மற்றொருவர் : அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே
-***-
ஒருவர் : போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார்
-***-
தொண்டர் 1 : தலைவர் எங்க நிக்கவச்சாலும் நான் நிப்பேன்னு பெருமையா பேசினது தப்பா போச்சு.
தொண்டர் 2 : ஏன் என்னாச்சு?
தொண்டர் 1 : வீட்டுக்கு வாசல்ல செக்யூரிட்டியா நிக்க வச்சுட்டாரு.
-***-
நண்பர் 1 : அந்த அம்பயர் ஏன் நடுவில் நிக்காம ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?
நண்பர் 2 : அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாங்களாம்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 88 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ஒருவர், தொண்டர், நண்பர், படத்துல, புடுங்கி, என்றும், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, தாலி