கடி ஜோக்ஸ் 89 - கடி ஜோக்ஸ்
மாப்பிளை : மாமா, உங்க வீட்டோட மாப்பிள்ளையா வர எனக்கு தன்மானம் இடம் கொடுக்காது.
மாமா : சரி, என்ன செய்யலாம் ?
மாப்பிளை : உங்க வீட்டை விற்று பணத்தை என்கிட்டே குடுத்துடுங்க. அந்தப் பணத்துல வேற வீடு வாங்கிக் குடி போயிடலாம்.
-***-
தொண்டர் 1 : "தலைவர் எதுக்கு அனாவசியமா சலூன் போகும் போதெல்லாம் தொண்டர்களையும் கூட்டிட்டுப் போறார்"
தொண்டர் 2 : "முடி வெட்டறதுக்கு முன்னால துண்டு போத்துவாங்கல்ல அப்ப கை தட்டறதுக்காக இருக்கும்."
-***-
கோபு : முரளிதரன் தூரா பந்து போட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சார் அம்பயர்க்கெல்லாம் குளிர்விட்டுப் போயிடிச்சு . . .
பாபு : எப்படி?
கோபு : 2 விரலை தூக்கிட்டு 2 பேட்ஸ்மேனும் அவுட் இது ஒரு மேஜிக் அப்படீன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
-***-
நிருபர் : ஆளுங்கட்சி எதிர்க்கட்சி 2க்கும் பொதுவான விஷயம் ஒண்ணு இருக்குன்னு அன்னிக்கு மீட்டிங்கில பேசறீங்களே அது என்ன?
அரசியல்வாதி : மக்களோட பணந்தான்.
-***-
ரமனன் : "சட்டை பொத்தான் போடறதையே 2 வாரமா காமிச்ச மெகா சீரியல் டைரக்டரோட அடுத்த சீரியல் விறுவிறுப்பா இருக்குமாம்"
வேலு : "எப்படி?"
ரமனன் : பொத்தானுக்கு பதிலா "ஜிப்" வச்சுட்டாராம்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 89 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ", jokes, கோபு, ரமனன், சீரியல், தொண்டர், எப்படி, உங்க, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, மாப்பிளை, மாமா, என்ன