கடி ஜோக்ஸ் 81 - கடி ஜோக்ஸ்
ஒருவர் : நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை
மற்றொருவர் : நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை
-***-
முட்டாள் 1 : சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...
முட்டாள் 2 : அதுக்கென்ன இப்போ..
முட்டாள் 1 : ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.
-***-
வக்கீல் : கொலை எங்கே நடந்தது?
சாட்சி : திருப்பதியிலே சார்.
வக்கீல் : இப்படி மொட்டையா சொன்னா எப்படி?
-***-
கோபு : அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு..
பாபு : ஏன்...
கோபு : அதான் சீப்பா கிடைக்குதாம்
-***-
பெரியசாமி : எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
சின்னசாமி : ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 79 | 80 | 81 | 82 | 83 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 81 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, முட்டாள், சார், எந்த, கடன், அதான், கோபு, வக்கீல், தவிர, இதுவரைக்கும், சிரிப்புகள், kadi, நகைச்சுவை, கிளினிக்கை, ஆரம்பிச்சதுலேர்ந்து, உங்களைத்