கடி ஜோக்ஸ் 80 - கடி ஜோக்ஸ்
கோபு : டேய் பாபு எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா
பாபு : அட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ. அது போதும்.
-***-
வேலு : அதான் டி.வி-யில் நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு..
பாக்கி : ஏன்... என்னாச்சு?
வேலு : இப்பப் பாருங்க.. ஓசி பேப்பர் வாங்க வரும் பக்கத்து வீட்டுக்காரரு, கொஞ்சம் டி.வி இருந்தாக் கொடுங்க.. நியூஸ் பார்த்துட்டு தர்றேன்னு சொல்றாரு
-***-
பாக்கி : உன் வயது பதினெட்டுதானே
ரமனன் : எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே
பாக்கி : ஓர் அரை லூசின் வயது ஒன்பது
-***-
சித்ரா : ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?
கோபு : சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?
-***-
ஆசிரியர் : பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?
மாணவன் : எனக்குத் தலையைச் சுத்துது சார்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 80 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நியூஸ், பாக்கி, வயது, தன்னைத்தானே, சுத்துமா, சுத்தி, சித்ரா, கல்யாணம், சிரிப்புகள், kadi, நகைச்சுவை, கோபு, தற்கொலை, பாபு, வேலு