கடி ஜோக்ஸ் 74 - கடி ஜோக்ஸ்

தொண்டர்1 : எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?
தொண்டர்2 : ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்
-***-
பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...
வேலு : நிஜமாவா?
பாபு : ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா
-***-
மனைவி: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கி விட்டார்.
டாக்டர்: இன்னும் சில நிமிஷத்தில் வந்து விடுகிறேன்
மனைவி: அதுவரை நான் என்ன செய்வது?
டாக்டர்: பென்சிலை உபயோகியுங்கள்.
-***-
ஒருவர்: நீங்க யாரு என்ன சொன்னாலும் ஆமான்னு சொல்லுவீங்களா ?
மற்றவர்: ஆமா!
-***-
வேலு : நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.
ரமனன் : அதெப்படி?
வேலு : மழையே பெய்யவில்லையே!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 74 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, வேலு, டாக்டர், என்ன, ஒருவர், மனைவி, பாபு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை