கடி ஜோக்ஸ் 75 - கடி ஜோக்ஸ்

அதிகாரி : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ?
பைலட் : யாரோ ஒரு பாராசூட் வீரர், விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. .
-***-
காவலாளி: இந்த குளத்தில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பெண்: ஆடை அவிழ்ப்பதற்கு முன்னே சொல்லியிருக்க கூடாதா?
காவலாளி: அதை தடுக்க எந்த சட்டமும் இங்கு இல்லை
-***-
நண்பர் 1 : டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...
நண்பர் 2 : எப்படி சொல்றீங்க..?
நண்பர் 1 : படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே
-***-
பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!
-***-
முட்டாள் 1 : ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
முட்டாள் 2 : பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 75 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, முட்டாள், பெண், நண்பர், என்னை, கல்யாணம், பெயிண்ட், இல்லையே, எப்படி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, அந்த, காவலாளி