கடி ஜோக்ஸ் 64 - கடி ஜோக்ஸ்
நீதிபதி : (குற்றவாளியிடம்) இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி : என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.
-***-
இரண்டு பெண்கள்,
முதல்பெண்: என் கணவர், திருமணமான புதுசிலே என்னைத் ’தேவயானி,தேவயானி’ ன்னு கொஞ்சுவாரு.
இரண்டாமவள்:இப்போ? முதல்:தேவையா நீ,தேவையா நீன்னு எரிஞ்சு விழுறாரு!
-***-
அப்பா: என்னடா… மார்க் ஷீட்ல ரொம்ப கம்மியா மார்க் வாங்கிட்டு வந்திருக்கே?
பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுப்பா… எதையுமே நிறைய வாங்க முடியல…
-***-
நோயாளி : (டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?
டாக்டர் : கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க பிழைச்சுடுவீங்க
-***-
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 64 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நீதிபதி, ரொம்ப, டாக்டர், ஆபரேஷன், மார்க், தேவையா, நகைச்சுவை, kadi, சிரிப்புகள்