கடி ஜோக்ஸ் 16 - கடி ஜோக்ஸ்

மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
-***-
ரமனன் : அவர் ரொம்ப குண்டு தான் ஆணா அதுக்காக அந்த ஹோட்டல்ல அவரை இப்படி அவமானப்படுத்தியிருக்கக் கூடாது
பாக்கி : அப்படி என்ன பண்ணீங்க
ரமனன் : மெனுவுக்கு பதிலா "கொடேஷன்" குடுத்தாங்களாம்
-***-
ஆசிரியர் : மாலா, ஆறில் பத்து போகுமா?
மாலா : போகும் சார்!
ஆசிரியர் : எப்படி?
மாலா : எங்க வீடு ஆத்துக்குப் பக்கத்திலேதான் சார் இருக்கு. எங்கம்மா தினமும், பத்துப் பாத்திரத்தை அங்கே தான் தேய்ப்பாங்க
-***-
நண்பர் : கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது! நீங்க என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?
அரசியல்வாதி : இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற கவலைதான்.
-***-
ரமனன் : என்னப்பா.. இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரியே இருக்கு..?
வேலு : இது XEROX காபி
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 16 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சார், ரமனன், ஆசிரியர், மாலா, தான், இருக்கு, காபி, என்ன, நகைச்சுவை, மாணவன், kadi, சிரிப்புகள்