சிரிக்கலாம் வாங்க 10 - சிரிக்கலாம் வாங்க
(ரேஷன் கடையில்)
என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?
பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..!?
-***-
"உன் புதுப் படத்துக்குப் பேரு ஏன் 'எங்கேயோ கேட்ட கதை'னு வெச்சே...?"
"எல்லாம் ஒரு தற்காப்புதான்!"
-***-
அந்த விமன்ஸ் கிரிக்கேட் டீம்ல இருக்காளே ஸ்பின் பௌலர், அவள் பேர் என்ன தெரியுமா?
தெரியாதே?
திருப்புற சுந்தரி.
அவளைவிட பெட்டரா டாப் ஸ்பின் பௌலிங் போடறவ எதிர்த்த டீம்ல இருக்கா, அவள் பெயர் தெரியுமா உனக்கு?
என்ன?
பால திருப்புற சுந்தரி.
-***-
"சே, காலம் ரொம்பக் கெட்டுப் போச்சுப்பா!"
"ஏம்பா?"
"என் பெண்டாட்டி கூடவே நான் அதிகமா கத்துறேன்னு என் சின்ன வீடு கோவிச்சுக்கிறா?"
-***-
"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"
"வழக்கமா செய்யறதுதானே!"
"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 10 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, டாக்டர், தெரியுமா, திருப்புற, என்ன, சுந்தரி, நான், டீம்ல, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, பேர், ஸ்பின், அவள்