மருதகாசி பாடல்கள் - பக்கம் - 94
கவிதா : பார்க்கப் பார்க்க மயக்குதடி பார்வையாலே அழைக்குதடி! வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே! கோரஸ் : வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே! (பார்க்க) கவிதா : பாத்தி கட்டித் தோட்டக்காரன் பரிவுடனே வளர்த்த கொடி! லீலா : பொங்கும் இளம் பருவத்தினால் பூத்து நின்று குலுங்குதடி! கோரஸ் : புதுப்புது கனவுகள் காணுதடி! காணுதடி காணுதடி! கவிதா : ஆதவனைக் கண்டு ஆசை மிகக் கொண்டு தாமரைப் பெண் இதழ் விரியும்! கோரஸ் : முகம் மலரும் லீலா : காதலனைக் கண்டு நீயது போல் நின்று கண்ணாலே பேசும் ஒரு கோரஸ் : நாளும் வரும்! கவிதா : வருவ தெல்லாம் வரட்டும்! தருவ தெல்லாம் தரட்டும்! லீலா : வாழ்க்கை மட்டும் நம்கையில் இல்லையடி!- அது மனிதருக்கே புலப்படாத எல்லையடி! (பார்க்க) |
கவிதா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: ஜமுனாராணி & குழுவினர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 94 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கவிதா, கோரஸ், காணுதடி, லீலா, பார்க்க