மருதகாசி பாடல்கள் - பக்கம் - 205
ரதி: பம் பம் பம் பம் சிக் பம் மன்மதன்: பம் பம் பம் பம் சிக் பம் கோரஸ்: காலையில் ராஜா ஆனாராம் மாலையில் கூஜா ஆனாரம் ரதி: பாலும் தேனும் கசப் பாகத் தோணு தென்று காலை வேளையிலே சொன்னாராம்! ரதி: கூழுக்காக பல்லைக் காட்டிக் கொண்டு-இவர் மாலை வேளையிலே நிண்ணாராம் ! (காலையில்) மன்மதன்: போனாராம் யானையைப் போலே பொல்லாத வேளையினாலே ! வந்தாராம் பூனையைப் போலே ! சிந்தையில் ஆணவம் கொண்டதன் பலனாலே (காலையில்) ரதி: நாலும் மூணும்-இனி ஏழு இல்லை-அது ஆறு என்று-இவர் சொன்னாராம் ரதி: தாளம் போட்டுத்-தலை ஆட்ட ஊரில் ஒரு ஆளும் இல்லை என்று கண்டாராம் ! (காலையில்) மன்மதன்: முட்டாளைத் தலைவனும் ஆக்கி மூளைக்கு மதிப்பையும் போக்கி எட்டாத கோட்டையைத் தாக்கி ஏட்டினில் தன் புகழ் சேர்த்திடப் பார்த்தாராம் ! (காலையில்) |
தலை கொடுத்தான் தம்பி-1959
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர் : S. C. கிருஷ்ணன் ஐமுகுராணி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 200 | 201 | 202 | 203 | 204 | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 205 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - காலையில், மன்மதன்