மருதகாசி பாடல்கள் - பக்கம் - 95

ஆண் : சும்மா சும்மா சிரிச்சுக்கிட்டு சொகுசு நடை போட்டுக் கிட்டு துள்ளித் துள்ளி ஆடிவரும்! உன்னைக் கண்டா சுத்திச் சுத்திப் பார்க்காத கண்ணும் உண்டா? பெண் : கும்மாளம் போட்டுக்கிட்டு குதிரை வண்டி ஒட்டிக்கிட்டு தெம்மாங்கு பாடி வரும் உன்னைக் கண்டா திரும்பிப் பார்க்காத கண்ணும் உண்டா? (சும்மா) ஆண் : மஞ்சள் பூசிக் குளிச்ச முகம் மினுமினுக்க மயக்க மூட்டும் பார்வையிலே நிலவெரிக்க மரிக் கொழுந்து கொண்டையிலே கமகமக்க! குறும்புப் பேச்சைக் கேட்பவங்க கிறுகிறுக்க! (சும்மா) பெண் : சிலுக்குச்சட்டை காத்துப்பட்டு சிலுசிலுக்க-தங்கச் சிலையைப் போல தேகக்கட்டு பளபளக்க தெருவழியே வண்டிச் சத்தம் கடகடக்க-கையில் சின்னஞ் சிறு சாட்டை வாரு துடிதுடிக்க! (சும்மா) ஆண் : புருவமெனும் வில்வளைச்சு பருவமெனும் அம்பெவச்சு புள்ளி மான் போல் குதிச்சு வெள்ளி மீனைக் கண்ணில் வச்சு (சும்மா) பெண் : வருபவங்க எல்லோருக்கும் அருமையான வழியைக் காட்டி புதுமையான பாதையிலே போவதற்கு ஆசைமூட்டி (சும்மா) ஆண் : ஒ! துள்ளித் துள்ளி ஆடிவரும் உன்னைக் கண்டா சுத்திச் சுத்திப் பாக்காத கண்ணும் உண்டா! |
அல்லி பெற்ற பிள்ளை-1959
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T.M. சௌந்தரராஜன் & P. சுசீலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 95 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சும்மா, பெண், உண்டா, கண்டா, உன்னைக், கண்ணும்