மருதகாசி பாடல்கள் - பக்கம் - 206
கழுகுமலை: கூஜா....... கூஜா...... கூஜா....... கூஜா.......கூஜா...... கூஜா…….ஏ.ய் கூஜா தூக்கி உடல் வளர்த்து ராஜா போலே நடை நடக்கும்- (கூஜா) மணி: ஒய்!...வானா. மூனா...கானா. ஒய் வானா ... மூனா . கானா மூனாத் தனத்தை மறைக்க வைக்க முதலாளியைக் காக்கா புடிக்கும் (வானா) கழுகுமலை: நாக்கை அடக்கு காக்கா புடிப்பவன் நானில்லேடா கூஜா-உன்போல் நடிகையின் பின்னே சுத்தித் திரியும் அடிமைப் பசங்க தாண்டா கூஜா (கூஜா) மணி: ஷோக்குப் பண்ணப்ராடு கணக்கு ஜோடிப்பதிலே ராஜா-பணத்தை சுரண்டும் உங்க விஷய மெல்லாம் தெரியும் எனக்கு பேஷா (வானா) |
(கெஜல்)
கழுகுமலை: ராஜாத்தி போல் வாழ்ந்த நட்சத்திரங்கள் கூட உன்னைப் போல்-கூஜா-பசங்களாலே நாசமாய்ப் போனதுண்டு. |
(பாட்டு)
குடியைக் கெடுக்கும் கூஜா-கோள் சொல்லித் திரியும் கூஜா-கும்மாளம் போடும் கூஜா மானம் கொஞ்சம் இல்லாத கூஜா- (கூஜா) |
(கெஜல்)
மணி: தேசத்தில் எத்தனையோ சிறப்பான கம்பெனிகள் உனைப் போல் மேனேஜர் அமைந்ததினால் காணாமல் போனதுண்டு |
(பாட்டு)
முட்டை அடிக்கிறதும் நீங்க-பணத்தை மூட்டை அடிக்கிறதும் நீங்க- கம்பெனி மூடு விழா செய்யறதும் நீங்க சேட்டைகள் பண்ணுறதும் நீங்க பொம்பளையைத் தேடியலையறதும் நீங்க-நீங்க ... (வானா) கழுகுமலை: பகட்டித் திரியிதடா கூஜா-முதலாளி பக்கத்திலே ஒரு வகை கூஜா பாடுபவர் ஆடுபவர் பின்னே-எங்கு பார்த்தாலும் கூஜா. கூஜா. கூஜா (கூஜா) |
மாங்கல்யம்-1954
இசை: K. V. மகாதேவன்
பாடியவர் : S. C. கிருஷ்ணன் & சீர்காழி கோவிந்தராஜன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 206 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கூஜா, நீங்க, வானா, கழுகுமலை, போல்