மருதகாசி பாடல்கள் - பக்கம் - 60

பெண் : தொடாதே! மாமா! மாமா! மாமா! ஆண் : ஏம்மா! ஏம்மா! ஏம்மா! பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்திச் சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?-தாலி கட்டும் முன்னே கையும் மேலே படலாமா? (-மாமா) ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா?-கையைத் தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா? (-ஏம்மா) பெண் : ஊரறிய நாடறியப் பந்தலிலே!-நமக்கு உற்றவங்க மத்தவங்க மத்தியிலே! ஒண்ணாகி உறவுமுறை கொண்டாடும் முன்னாலே ஒருவர் கையை மற்றாெருவர் பிடிக்கலாமா?-இதை உணராம ஆம்பளைங்க துடிக்கலாமா? ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே!-துாண்டி போடுகிற உங்களது கண்ணாலே! ஜாடை காட்டி ஆசை மூட்டி சல்லாபப் பாட்டுப் பாடி நீங்க மட்டும் எங்க நெஞ்சைத் தாக்கலாமா? - உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா? பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்தவுடன் காதலிச்சு - அவளைக் கைவிட்டு ஒன்பது மேல் ஆசை வச்சு வண்டாக மாறுகின்ற மனமுள்ள ஆம்பளைங்க கொண்டாட்டம் போடுவதைப் பார்த்ததில்லையா? -பெண்கள் திண்டாடும் கதைகளையே கேட்டதில்லையா? ஆண் : ஒண்ணெ விட்டு ஒண்ணெத் தேடி ஒடுறவன்! ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்! உள்ள இந்த உலகத்தையே உற்றுப் பார்த்தா நீங்க இப்போ சொல்லுவது எல்லாமே உண்மைதான்!-கொஞ்சம் தூரநின்னு பழகுவதும் நன்மைதான்! நன்மைதான்! ஆமா! ஆமா! ஆமா! பெண் : கட்டுப்பாட்டை மீறாமெ சட்ட திட்டம் மாறாமெ காத்திருக்க வேணும் கொஞ்சகாலம் வரை! கல்யாணம் ஆகிவிட்டால் ஏது தடை? |
குமுதம்-1961
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & ஜமுனராணி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 60 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், ஏம்மா, மாமா