மருதகாசி பாடல்கள் - பக்கம் - 58

பெண்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை! என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை! (வண்டி) ஆண்: சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு ஷோக்கு மாப்பிள்ளை வாராறே இன்று! ஷோக்கு மாப்பிள்ளை வாராறே இன்று! பெண்: வந்தாலும் பலனில்லையே-அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆள் இல்லையே! (வண்டி) பெண்: நிலவைக்கண்டு மலரும் அல்லி விளக்கைக் கண்டு மலருமா? உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும் உண்மை இன்பம் கொண்டாடுமா? ஆண்: விளங்கும்படி சொல்லம்மா வெண்ணிலவும் யாரம்மா? வேலைக்காரன் எனக்கு அது புரியுமா? என் வேலையை நான் பார்க்க வேணும் தெரியுமா? - சும்மா விளையாட வேணாம் அதைக் கொடம்மா! கொடம்மா! பெண்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை! என்றும் அது போல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை! ஆண்: வம்பு ஏனம்மா? வாங்க! அதை தாங்க! வந்த வழிபார்த்து நேராகப் போங்க! நீங்க வழி பார்த்து நேராகப் போங்க! பெண்: வழிபார்த்து நான் போகவே-எந்தன் மனம் நாடும் நிலவாகி வழிகாட்டுங்க! ஆண்: ஆ... ... ... பெண்: ஊம்... ... ... ஆண்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை! பெண்: என்றும் அதுபோல வாழ்க்கை ஒடவே ரெண்டு அன்புள்ளம் தேவை! ஆண்: ஊம்! இருவர்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை! என்றும் அதுபோல வாழ்க்கை ஒடவே ரெண்டு அன்புள்ளம் தேவை! |
வண்ணக்கிளி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 58 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - தேவை, பெண், வண்டி, ரெண்டு, அன்புள்ளம், வாழ்க்கை, என்றும், உருண்டோட, அச்சாணி, அதுபோல