மருதகாசி பாடல்கள் - பக்கம் - 61
ஆண் : கொடுத்துப் பார்! பார்! பார்! உண்மை அன்பை! நினைத்துப் பார்! பார்! அதன் தெம்பை! உயர்வு தாழ் வெனும் பேதத்தைப் போக்கும்! இருவர் வாழ்வினில் இன்பத்தைச் சேர்க்கும்! (கொடு) ஆண் : கண்ணுக்குள் மின்னல் வெட்டைக் காட்டுகின்ற கண்ணம்மா! கன்னத்தில் ஆப்பிள் வந்து காய்த்திருப்பதென்னம்மா! உண்பதற் காகுமா? என் பசி தீருமா? உள்ளதைக் கேட்டாலே என் மீது கோபமா? (கொடு) பெண் : கற்பனை உங்களுக்கே சொந்த மென்ற எண்ணமா? சர்க்கரை பாகு உங்கள் நாவில் வந்த தென்னம்மா பிறவியில் வந்ததா? பெண் அன்பு தந்ததா? இரவெல்லாம் உறவாடும் கனவாலே சேர்ந்ததா? (கொடு) ஆண் : ஆட்டத்தில் தோகையோடு போட்டி போடும் முல்லையே: ஓட்டத்தில் என்னை நீயும் வெல்வதற்கு இல்லையே! தோற்றத்தில் முல்லை நான்! ஓட்டத்தில் புள்ளி மான்! போட்டியும் போட்டாலே தவறாமல் வெல்லுவேன் (கொடு) பெண் : உன்னாலே எந்தன் உள்ளம் ஊஞ்சல் ஆடுதே பின்னாலே சுத்திச் சுத்தித் தாளமெல்லாம் போடுதே காலத்தின் கோலமா? காதலின் ஜாலமா? காணாத புது வாழ்வு கண் இன்று காணுதே! (கொடு) |
விடிவெள்ளி-1960
இசை : A. M. ராஜா
பாடியவர்கள்: ராஜா & ஜிக்கி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 61 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பார், கொடு, பெண்