மருதகாசி பாடல்கள் - பக்கம் - 62

ஆண் : தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா?-காதல் கண்கள் உறங்கிடுமா? பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா?-காதல் கண்கள் உறங்கிடுமா? ஆண் : நீலஇரவிலே தோன்றும் நிலவைப் போலவே வாலைக் குமரியே நீயும் வந்தபோதிலே! பெண் : நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா? ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா? அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா?-காதல் கண்கள் உறங்கிடுமா? ஆண் : இதய வானிலே இன்பக் கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே! பெண்: வானம்பாடி ஜோடி கானம் பாடமயங்குமா? வாசப் பூவும் தேனும் போல வாழத் இருவரும்: அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உ றங்கிடுமா?-காதல் கண்கள் உறங்கிடுமா? |
பெற்ற மகனை விற்ற அன்னை-1958
இசை: மெல்லிசை மன்னர்கள் - எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள் : A.M. ராஜா & P. சுசீலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 62 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கண்கள், உறங்கிடுமா, காதல், ஆடும், பெண்