மருதகாசி பாடல்கள் - பக்கம் - 56
பெண்: உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே! ஆண்: அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே! பெண்: உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே! ஆண்: இதயம் அந்த மலைக்கு ஏது? அன்பைக் காட்டவே! பெண்: தெளிந்த நீரைப் போன்ற தூய காதல் கொண்டோம் நாம்! ஆண்: களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்! பெண்: குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ? ஆண்: உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே? இருவரும்: உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோணிதனில் ஊர்ந்து செல்லுவோம்! |
மந்திரி குமாரி-1950
இசை: G. ராமநாதன்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & ஜிக்கி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 54 | 55 | 56 | 57 | 58 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 56 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்