மருதகாசி பாடல்கள் - பக்கம் - 33

சின்ன அரும்பு மலரும்-அது சிரிப்பைச் சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும்-நான் களிக்கும் நாள் வரும் (சின்ன) மண்ணில் உலவும் நிலவே-என் வயிற்றில் உதித்த கனியே வாழ்வு உன்னால் செழித்தே-மனம் மகிழும் நாள் வரும்-நான் மகிழும் நாள் வரும் (சின்ன) உனது மாமன் வருவார் அணைத்து இன்பம் பெறுவார் உரிமை எல்லாம் தருவார்-அந்த அரிய நாள் வரும்-சுகம் பெருகும் நாள் வரும் (சின்ன) ஏழை கண்ட தனமே-மனம் இளகச் செய்யும் அழகே வாழைக் குருத்துப் போலவே-நீ வளரும் நாள் வரும்-குலம் தழைக்கும் நாள் வரும் (சின்ன) நீ எங்கு இருந்த போதும்-என் இதயம் உன்னை வாழ்த்தும்-தாய் அன்பு உன்னைக் காக்கும்-நீ அழுவ தேனடா-உறங்கி அமைதி காணடா. (சின்ன) |
பங்காளிகள்-1961
இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 33 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வரும், நாள், சின்ன