மருதகாசி பாடல்கள் - பக்கம் - 35

முத்தே! பவளமே! முக்கனியே! சர்க்கரையே! கொத்து மருக்கொழுந்தே! கோமளமே கண்வளராய்! ஆளப்பிறந்த என் கண்மணியே!-எந்தன் ஆசையைக் கேளடா விண்மணியே! நாளொரு மேனியும் நீ வளர்ந்தே!-கலை ஞானத்தில் தேர்ந்திட வேண்டுமடா! சீலம் மிகுந்தே எந்நாளும்! மக்கள் சிந்தையில் நிலைபெற வேண்டுமடா! ஏழையென் வீட்டுக்கு வந்தவனே!-இணை இல்லாத ஆனந்தம் தந்தவனே! வாழைக்குருத்தென நீ வளர்ந்தே-ஒரு வல்லவனாகிட வேண்டுமடா! வாழப் பிறந்த கண்மணியே! சொல்லும் வார்த்தையைக் கேளடா பொன்மணியே! பிள்ளைக் கலிதீர்த்த தெள்ளமுதே! உந்தன் சொல்லே ஆணையாக வேண்டுமடா! எந்தன் உள்ளங்குளிர இம்மண் மேலே-எல்லை இல்லாப் புகழ் தேட வேண்டுமடா!
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 35 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வேண்டுமடா Tamil Surangam - Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
|