மருதகாசி பாடல்கள் - பக்கம் - 197
சேகர்: வளையல்-அம்மா! வளையல்! ஜக்கன்: வளையல்! அம்மா! வளையல்! வளைசல் நெளிசல் ஒடசல் இல்லா வளையல்! சேகர்: பளபளப்பான பம்பாய் வளையல் இருக்குது பலதினுசு - கைவசம் இருக்குது பலதினுசு! ஜக்கன்: புது பாஷன் பூனா வளையல் இதுக்கு எங்கும் தனிமவுசு !-எப்போதும் எங்கும் தனிமவுசு! சேகர்: வழவழப்பான கைகளுக்கேத்த வங்கிரகம் புதுசு! இந்த வங்கிரகம் புதுசு! ஜக்கன்: இதை .... வாங்கிப் போட்டுக்கும் அம்மாமாருக்கு வந்து சேரும் சொகுசு!-தேடி வந்து சேரும் சொகுசு! |
(வேறு நடை)
ஜக்கன்: புள்ளைக்குட்டி பெத்தெடுத்த பொம்பளைங்க கூட இதை போட்டுக்கிட்டா வயசு தெரியாது! சேகர்: பனப் .... புழக்கமில்லா ஏழைகளும் சல்லுசாக வாங்கும் நகை பூமியிலே வேறு கிடையாது! ஜக்கன்: கள்ளத்தனமாக இரு காதலர்கள் பேசும்போது எள்ளளவு ஒசையும் செய்யாது! :-இது எள்ளளவு ஒசையும் செய்யாது! சேகர்: கப்பலேறி இங்குவந்த ரப்பர் வளைஇது எந்தக் காரணத்தினாலும் உடையாது !- எந்தக் காரணத்தினாலும் உடையாது ! |
(வேறு நடை)
செகப்புவளையல் கறுத்த கையில் ஜிலு ஜிலுன்னு ஜொலிக்கும் ! கருப்பு வளையல் செவத்த கையின் மதிப்பை அதிகமாக்கும்: ஜக்கன்: கனத்த உடம்பு பெண்களுக்கு காரு வளையல் இருக்கு! கடகம் இது தலையணையா உதவி செய்யும் நமக்கு: |
(வேறு நடை)
சேகர்: பொன்னைப் போலவே மின்னும் கண்ணாடி வளையல் ரொம்ப ஜோரு! - இந்த வளையல் ரொம்ப ஜோரு! ஜக்கன்: கையில் போட்டு ஆட்டினா புருஷனும் மயங்கி கேட்டதைத் தருவாரு!- நீ கேட்டதைத் தருவாரு! சேகர்: கன்னிப் பெண்களின் கண்ணைக் கவ்வும் கங்கணக் காப்பைப் பாரு! - இந்த கங்கணக் காப்பைப் பாரு! ஜக்கன்: இது கையில் ஏறினா கல்யாண மாப்பிள்ளை வீடு தேடி வருவாரு! - உன் வீடு தேடி வருவாரு! |
ஆசை-1956
இசை: T.R. பாப்பா
பாடியவர்கள்: N. S. கிருஷ்ணன், A. M. ராஜா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 195 | 196 | 197 | 198 | 199 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 197 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வளையல், ஜக்கன், சேகர், வேறு, கையில், தேடி