மருதகாசி பாடல்கள் - பக்கம் - 198
ஆண்: சீனத்து ரவிக்கை மேலே சேலம் பட்டு சரிகைச் சேலே! ஓரங் கிளிஞ்ச தென்னடி?-எங்குருவிக்காரி உண்மையைச் சொல்லிப் போடடி! பெண்: பானையை எறக்க நானும் பரணை மேலே ஏறும் போது ஆணி மாட்டிக் கிழிஞ்சி போச்சுடா! எங்குருவிக்காரா அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா! ஆண்: மாலை வெயில் டாலடிக்கும் மாம்பழக்கன்ன நிறம் மாறிச் சிவந்த தென்னடி?-எங்குருவிக்காரி மர்மம் விளங்கச் சொல்லடி! பெண்: மாலையிட்ட மம்முதனே! காலையிலே உன்னுடைய வாண்டுப் பயல் கடிச்சிப் போட்டாண்டா! –எங்குருவிக்காரா தாண்டியே குதிக்க வேணாண்டா! ஆண்: சீவி சினுக்கெடுத்து சிங்காரிச்சு பூவும் வச்சு கோயிலுக்குத் தானே போனே?-எங்குருவிக்காரி கூந்தல் கலைஞ்சதென்னடி? பெண்: கோயிலுக்கு போயிநானும் கும்பிட்டதும் என் மேலே சாமி வந்து ஆடுனதாலே!-எங்குருவிக்காரா தலையும் கலைஞ்சு போச்சுடா! ஆண்: நீ கைவீசிப் போகையிலே கலகலண்ணு ஒசையிடும்! கண்ணாடி வளையல் பூராவும்!-எங்குருவிக்காரி ஒண்ணில்லாம ஒடைஞ்ச தென்னடி? பெண்: நான் பொய் பேசப் போறதில்லே!-மச்சான் ஒரு புத்தியில்லாகாலிப்பயல் கையைப் புடிச்சு இழுத்ததால்!-எங்குருவிக்காரா கலகத்துல ஒடைஞ்சு போச்சுடா! ஆண்: ஆங்! அப்படியா! அவன் யாரு? அவன் என்ன? அவன் எங்கே? நீ காட்டு! நான் போட்டு!-சும்மா கும்தளாங்கு குமுர்தகுப்பா! ஷிங் ஷிணாகி டபுக்கு டப்பா! குத்து! ஒருவெட்டு! ஒரு தட்டு! ஆ, ஹய்! ஆஹய்! ஆஹய்! |
முல்லைவனம்-1955
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 196 | 197 | 198 | 199 | 200 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 198 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - எங்குருவிக்காரி, பெண், அவன், எங்குருவிக்காரா, போச்சுடா, மேலே, தென்னடி