மருதகாசி பாடல்கள் - பக்கம் - 191
காசு பணம் செலவழித்து கல்லோடு மண்சேர்த்து ஆசையினால் மனிதன் அமைப்பதெல்லாம் கலைக்கோயில்! மாசில்லா அன்பின் வடிவாக ஆண்டவன் காசினியிலே படைத்த கண்கண்ட திருக்கோயில்! ஈன்று வளர்த்து இரவு பகல் கண்விழித்து ஈயெறும்பு மொய்க்காமல் இன்னல் பல சுமந்து பாலூட்டி தாலாட்டி பரிவோடு ஆளாக்கி வாழவைக்கும் தியாகியாம் மாதாவே பெரியகோவில்! பெரியகோயில் என்றே உலகினில் எந்நாளும் பேர்பெற்று விளங்கும் கோயில்! அரியகோயில் ஜாதிமத பேதமின்றியே அனைவர்க்கும் உரிய கோயில்! தருமநெறி இதுவென்று நமக்கெல்லாம் உணர்த்தியே சன்மார்க்கம் வளர்க்கும் கோயில்! தாயெனும் தூய திருக்கோயிலைப் போற்றியே வாயார வாழ்த்துவமே! |
பெரிய கோயில்-1958
இசை: K. V. மகாதேவன்
பாடியவர் : சிர்காழி கோவிந்தராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 189 | 190 | 191 | 192 | 193 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 191 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கோயில்