மருதகாசி பாடல்கள் - பக்கம் - 190

உம்...........சாவு..........சாவு......... சஞ்சலம் தீர்க்கும் மருந்து-அது சாந்தியும் நிம்மதியும் தரும் விருந்து! பஞ்சம் பசிப்பிணியால் தவிப்பவர்க்கு-இனி அஞ்சேல் என அபயம் அளிக்கும்! நெஞ்சத் துயர் சுமையால் துடிப்பவர்க்கு அது நீங்காத அமைதியைக் கொடுக்கும். (சஞ்சலம்) சாவின் மடியில் தான் கவலையில்லை. செத்தும் சாகாமல் வாழும் இந்த நிலமையில்லை! வாழ்வுமில்லை.சாவில் தாழ்வுமில்லை! நானுமில்லை-அங்கே நீயுமில்லை-! (சஞ்சலம்) அழுக்கு.......அழுக்கு...... உள்ளே அழுக்கிருக்க வெளியழுக்கை விலக்க நினைப்பது ஏன் மட நெஞ்சமே-உற்று நினைத்துப் பார் நீ இதைக் கொஞ்சமே! குள்ள நரித்தனக் கள்ளம் கபடங்கள் உள்ளத்தில் ஒரு கோடியுண்டு-அதை வெள்ளைத்துணியாலும் வெல்லம் போல்சொல்லாலும் மூடி மறைப்பவர்கள் உண்டு-அந்த மனிதர் அழுக்கை எண்ணிப்பாரு-அதை அகற்ற நல்லவழி கூறு! இத்த சிக்கை அறுத்து விட முடியும்-அந்த சிக்கை யாரால் அறுக்க முடியும்? பக்குவம் அடையாத பாழ் மனம் தன்னையே பாசக் கொடியும் பின்னிப் பற்றி படருதே! மக்கள் மனைவி சொந்தம்! மாதா பிதாவின் சொந்தம்! திக்கித் திணறி நெஞ்சைத் திண்டாடச் செய்யுதே-அந்த சிக்கையாரால் அறுக்க முடியும்? |
பிறந்த நாள்-1962
இசை: K. V, மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 188 | 189 | 190 | 191 | 192 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 190 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - முடியும், அந்த, சஞ்சலம்