மருதகாசி பாடல்கள் - பக்கம் - 181
நாம-ஆடுவதும் பாடுவதும் காசுக்கு! பலர்-ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு! சிலர்-கூடுவதும் குழைவதும் காசுக்கு! காசுக்கு... ... காசுக்கு (நாம ஆடு). பல்லு-இல்லாத வெள்ளைத் தாடி-மாப்பிள்ளை தேடி-தம் செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடானுகோடி! எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு-(நாம ஆடு). பணம்-படைத்தவரின் சொல்லைக் கேட்டு அதுக்குத் தாளம் போட்டு-பலர் பல்லிளித்துப் பாடிடுவார் பின் பாட்டு எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு! (நாம ஆடு) |
அலிபாபாவும் 40 திருடர்களும்-1955
இசை: S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: ஜிக்கி & குழுவினர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 179 | 180 | 181 | 182 | 183 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 181 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - காசுக்கு