மருதகாசி பாடல்கள் - பக்கம் - 180
பிறப்பவர்கள் பலகோடி! இறப்பவர்கள் பலகோடி! இறப்பில்லாமல் என்றும் வாழ தியாகமே உயிர்நாடி! புரட்சி எனும் விதைவிதைத்து பொது நலமென்னும் பயிர்வளர்த்து அடக்கு முறைக்கும் ஆளாவோர் அடையும் பரிசும் இதுதானோ? மக்கள் வாழ்வை முன்னேற்ற மங்கையர் கற்பைக் காப்பாற்ற நித்தம் உழைக்கும் உத்தமரின் நிலையும் உலகில் இதுதானோ? கொந்தளிக்கும் கடல் அலைபோல் நெஞ்சமெல்லாம் குமுறுதடா! சொந்த உயிர் பிரிவது போல் இந்த நாடே துடிக்குதடா! |
வீரக்கனல்-1960
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 178 | 179 | 180 | 181 | 182 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 180 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -