மருதகாசி பாடல்கள் - பக்கம் - 179
தொகையறா
உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும் முழு மோசக்காரன் தானே முடிவில் நாசமாவான்! |
பாட்டு
அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணங்கொண்ட பாவிகள் மண்ணாய் போகநேருமே! |
தொகையறா
வேஷங்கண்டு மயங்கியே வீணாக ஆசை கொண்டு மோசமும் போன பின்னால் மனவேதனை யடைவதாலே லாபமென்ன? |
பாட்டு
பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தான் வந்திடும் அதை அடிச்சே கொல்ல நேர்ந்திடும்! |
மந்திரி குமாரி-1950
இசை: G. ராமநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 177 | 178 | 179 | 180 | 181 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 179 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -