மருதகாசி பாடல்கள் - பக்கம் - 182
பெண்ணெனும் மாயப்பேயாம்-பொய்மாதரை என் மனம் நாடுவேனோ-அழகினால் உலகமே அழியும் : மின் விழிப்பார்வை நோயால்-மெய்யறிவு தன் நிலை மாறுவேனோ? கன்னியர் காமத்தீயாம்-பொய்க்கானலில் வெந்துடல் வாடுவேனோ? புன் மொழி மாதை நானே-எண்ணியே பொய் வழி சேருவேனோ? பெண்களைப் பேணுவார்தாம்-பின்னாளிலே விண்ணினைக் காணுவாரோ? உண்பதோ காயை வீணே!-இங்கெவரும் உண்ணுவார் தீங்கனியே! அண்ணலைப் பாடுவேனே-மெய்ப்பேரின்ப நன்னிலை நாடுவேனே! சம்புவின் நாமமதே பணிந்திட பந்தமதே நீங்குமே! |
மாயாவதி-1949
இசை: G. ராமநாதன்
பாடியவர்: T. R. மகாலிங்கம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 180 | 181 | 182 | 183 | 184 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 182 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -