மருதகாசி பாடல்கள் - பக்கம் - 132
தொகையறா
ஆண்: மந்தரையின் போதனையால் மனம் மாறிகைகேயி மஞ்சள் குங்குமம் இழந்தாள்! வஞ்சகச் சகுனியின் சேர்க்கையால் கெளரவர்கள் பஞ்ச பாண்டவரை பகைத்தழிந்தார்! சிந்தனையில் இதையெல்லாம் சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம் மந்தமதியால் அறிவு மயங்கி மனம் போன படி நடக்கலாமா? |
(பாட்டு)
கோரஸ்: ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே! (ஒற்) உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாடமே அணையாத தீபமாய்ச் சுடர் என்றும் வீசுமே ஆண்: நெஞ்சில்-உண்டான அன்பையே துண்டாடி வம்பையே உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே இருவரும்: வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே. ! கோரஸ்: ஒற்றுமையாய் .. ! ! இருவரும்: துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே! வனவேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே! ஆண்: இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே கதையான போதிலும் கருத்துள்ள பாடமே! இருவரும்: வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே! கோரஸ்: ஒற்றுமையாய்...! இனத்தாலே, ஒன்று நாம்! மொழியாலும் ஒன்றுதான்! இணையில்லா தாயகம் நமக்கெல்லாம் வீடுதான்! ஒரு தாயின் சேய்கள் நாம்! இது என்றும் உண்மையே! அறிவோடு நாமிதை மறவாமல் எண்ணியே ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! |
பாகப்பிரிவினை-1959
இசை: விஸ்வநாதன். ராமமூர்த்தி
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & L. R. ஈஸ்வரி குழுவினர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 130 | 131 | 132 | 133 | 134 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 132 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ஒற்றுமையாய், தீமையே, இருவரும், விளையும், வளர்ப்பதனாலே, வேற்றுமையை, கோரஸ்