மருதகாசி பாடல்கள் - பக்கம் - 131

பட்டு: கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்! வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்! நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும் ! நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்! உண்மையிதை உணர்ந்து நன்மைபெறப் படித்து உலகில் பெரும் புகழ் சேர்த்திடடா! குமரன்: பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று பலரும் போற்ற புகழ் பெறுவேன்! பட்டு: சபாஷ்! அக்கம் பக்கமே பாராது! ஆட்டம் போடவும் கூடாது! அழுவதும் தவறு! அஞ்சுவதும் தவறு! எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு! குமரன்: அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்! இந்த நாட்டின் வீரனாவேன்! பட்டு: சபாஷ்! தன்னந்தனிமையில் நீயிருந்தால் துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால் கண்கலங்குவாயா? துணிந்து நிற்பாயா? கண்மணி எனக்கதை சொல்லிடு நீ! குமரன்: புயலைக் கண்டு நடுங்கமாட்டேன்! முயன்று நானே வெற்றி கொள்வேன்! பட்டு : சபாஷ்! |
கைதி கண்ணாயிரம்-1960
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 129 | 130 | 131 | 132 | 133 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 131 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பட்டு, சபாஷ், குமரன்