மருதகாசி பாடல்கள் - பக்கம் - 130
காட்டு மல்லி பூத்திருக்க காவல் காரன் பாத்திருக்க ஆட்டம் போட்டு மயிலைக் காளை தோட்டம் மேயப் பாக்குதடா! மாட்டுக்கார வேலா! ஓம் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா! (காட்டு) கோட்டைச் சுவர் போல வேலி இருக்கு! குத்தும் கருவேல முள்ளுமிருக்கு! தோட்டக்காரன் கையில் கம்பு மிருக்கு! சுத்திச் சுழட்டவே தெம்புமிருக்கு! மாட்டுக்கார வேலா! ஓம் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா! (காட்டு) போகாத பாதையிலே போகக் கூடாது-சும்மா புத்தி கெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது! மாடாகவே மனுஷன் மாறக் கூடாது! மற்றவங்க பொருளுமேலே ஆசை வைக்க கூடாது! மாட்டுக்கார வேலா! ஒம் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா! (காட்டு) |
வண்ணக்கிளி-1959
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 128 | 129 | 130 | 131 | 132 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 130 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - காட்டு, கூடாது, கொஞ்சம், வேலா, மாட்டுக்கார