தமிழ் - தமிழ் அகரமுதலி - விடாய்ப்பு முதல் - விடூசி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விடாய்ப்பு | வேட்கை ; களைப்பு ; ஆசை . |
| விடாயன் | வேட்கையுள்ளவன் ; களைப்புற்றவன் ; காமுகன் . |
| விடாயுதம் | பாம்பு . |
| விடாயெடுத்தல் | தாகமெடுத்தல் . |
| விடாலகம் | பூனை ; பொன்னரிதாரம் . |
| விடி | காண்க : விடிகாலை ; தனிப்பட்டது ; திரைச்சீலை ; சிறுமரவகை . |
| விடிகாலை | பொழுது விடிகின்ற நேரம் . |
| விடிதல் | உதயமாதல் ; முடிவுபெறுதல் ; துன்பம் நீங்கி இன்புறுதல் . |
| விடிமீன் | காண்க : விடிவெள்ளி . |
| விடியல் | காண்க : விடிகாலை ; மலங்கழித்தல் ; வயிற்றுப்போக்கு ; வெளியிடம் . |
| விடியல்வைகறை | பொழுது விடிதற்கு முன்னர்த்தாகிய வைகறை . |
| விடியற்காலம் | வைகறை . |
| விடியாவழக்கு | ஒருபொழுதும் முடிவுபெறாத வழக்கு . |
| விடியாவிளக்கு | காண்க : நந்தாவிளக்கு . |
| விடிவிளக்கு | விடியும்வரை எரியும் விளக்கு . |
| விடிவு | காண்க : விடிகாலை ; துன்பம் நீங்கி இன்பம் வருகை ; ஒழிவுவேளை ; வெளியிடம் ; அச்சம் ; நறும்புகை . |
| விடிவெள்ளி | விடியற்காலையில் கிழக்கில் தோன்றும் சுக்கிரன் . |
| விடிவேளை | வைகறை . |
| விடிவை | வைகறை . |
| விடிவோரை | அதிகாலை . |
| விடு | பகலிரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள் . |
| விடுகதை | விடுவிக்கவேண்டிய புதிர் . |
| விடுகவி | தனிப்பாட்டு . |
| விடுகாது | வளர்த்துத் தொங்கவிடும் தொள்ளைக் காது . |
| விடுகாலி | பட்டிமாடு ; கட்டுக்கடங்காதவர் . |
| விடுகுதிரை | பககைவர்மேல் விடுங் குதிரைப்பொறி . |
| விடுத்தம் | தடவை ; எட்டிமரம் . |
| விடுத்தல் | அனுப்புதல் ; போகவிடுதல் ; பந்தம் விடுவித்தல் ; நெகிழ்த்துதல் ; பிரித்தல் ; நீங்குதல் ; நீக்குதல் ; விலக்குதல் ; கைவிடுதல் ; நிறுத்துதல் ; ஒழித்துவிடுதல் ; முடித்தல் ; எறிதல் ; சொரிதல் ; கொடுத்தல் ; இசைவுதருதல் ; காட்டித்தருதல் ; வெளிப்படுத்துதல் ; உண்டாக்குதல் ; செலுத்துதல் ; சொல்லுதல் ; வெளிவிடுதல் ; வெளிப்படக்கூறுதல் ; விவரமாகக் கூறுதல் ; விடைகூறல் ; விடைபெறுதல் ; தங்குதல் . |
| விடுத்துவிடுத்து | அடிக்கடி . |
| விடுதருதல் | கொடுத்தனுப்புதல் ; தடையின்றி முன்செல்லுதல் . |
| விடுதல் | நீங்குதல் ; நீக்குதல் ; விலக்குதல் ; பிரித்தல் ; கைவிடுதல் ; போகவிடுதல் ; அனுப்புதல் ; பந்தம் விடுதல் ; நிறுத்துதல் ; ஒழித்துவிடுதல் ; முடித்தல் ; வெளிவிடுதல் ; செலுத்துதல் ; எறிதல் ; சொரிதல் ; கொடுத்தல் ; சொல்லுதல் ; வெளிப்படக் கூறுதல் ; விவரமாகக் கூறுதல் ; இசைவளித்தல் ; காட்டித்தருதல் ; வெளிப்படுத்துதல் ; பிரிதல் ; புதிர்விள்ளுதல் ; கட்டு அவிழ்தல் ; மலர்தல் ; உண்டாக்குதல் ; மிகுதல் ; தங்குதல் ; தவிர்தல் ; பிளந்திருத்தல் ; பலம் குறைதல் ; அறுபடுதல் ; விலகுதல் ; துணைவினை ; விடுதலை . |
| விடுதலம் | நிலாமுற்றம் ; பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடப்பட்ட காலிநிலம் . |
| விடுதலை | சுதந்தரம் ; ஓய்வு ; பந்தநீக்கம் . |
| விடுதலைப்பத்திரம் | சொத்தில் உரிமையில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் . |
| விடுதி | தங்குமிடம் ; காலிநிலம் ; தனித்தது ; ஆணை . |
| விடுதிப்பூ | காண்க : விடுபூ . |
| விடுதியாள் | வேலையில்லாதவன் ; குடும்பபாரமில்லாத தனித்த ஆள் . |
| விடுது | ஆலம் விழுது ; தூக்குருண்டை ; ஆழம் பார்ப்பதற்காக ஒரு முனையில் ஈயவுருண்டை கட்டிய கயிறு . |
| விடுதுறை | படிக்கும்போது நிறுத்துமிடம் . |
| விடுதோல் | மேற்றோல் . |
| விடுந்தலைப்பு | சீலையின் முன்றானை . |
| விடுநகம் | கிட்டிக்கோல் . |
| விடுநாண் | அரைஞாண் . |
| விடுநிலம் | தரிசுநிலம் . |
| விடுப்பு | நீக்கம் ; விடுமுறை ; துருவியறியுந்தன்மை ; விநோதமானது ; விருப்பம் . |
| விடுபடுதல் | நீக்கப்படுதல் ; விடுதலையடைதல் . |
| விடுபடை | எறியப்படும் படை . |
| விடுபதி | மருமகன் . |
| விடுபாட்டு | தனிப்பாடல் . |
| விடுபூ | தொடுக்காத பூ . |
| விடுமலர் | மலர்ந்த பூ . |
| விடுமுறை | ஓய்வுநாள் . |
| விடுவாய் | காண்க : விடப்பு . |
| விடுவாய்செய்தல் | அரிதல் . |
| விடுவிடெனல் | சுறுசுறுப்பாயிருத்தற் குறிப்பு ; அச்சக்குறிப்பு ; சினத்தற்குறிப் . |
| விடுவித்தல் | விடுதலைசெய்தல் ; உட்பொருளைக் கூறுதல் . |
| விடூசி | அம்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 971 | 972 | 973 | 974 | 975 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடாய்ப்பு முதல் - விடூசி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வைகறை, கூறுதல், விடிகாலை, உண்டாக்குதல், செலுத்துதல், வெளிப்படுத்துதல், கொடுத்தல், சொரிதல், சொல்லுதல், காட்டித்தருதல், வெளிவிடுதல், விடுதல், விடுதலை, காலிநிலம், விடுமுறை, தங்குதல், விவரமாகக், எறிதல், விடுபூ, ஒழித்துவிடுதல், வெளியிடம், அனுப்புதல், போகவிடுதல், விடிவெள்ளி, நீங்கி, பொழுது, துன்பம், பந்தம், விடுவித்தல், கைவிடுதல், நிறுத்துதல், விலக்குதல், நீக்குதல், பிரித்தல், நீங்குதல், முடித்தல்

