முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முதுக்குடி முதல் - முந்துறுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முதுக்குடி முதல் - முந்துறுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முதுக்குடி | காண்க : முதுகுடி . |
| முதுக்குறை | காண்க : முதுக்குறைமை(வு) . |
| முதுக்குறைதல் | அறிவுமிகுதல் . |
| முதுக்குறைமை | பேதைமை ; பேரறிவு ; பெண் தெருளுகை . |
| முதுக்குறைவு | பேதைமை ; பேரறிவு ; பெண் தெருளுகை . |
| முதுகண் | முதன்மையான ஆதாரம் . |
| முதுகயம் | கடல் . |
| முதுகன்று | பால்குடி மறந்த கன்று . |
| முதுகாஞ்சி | அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமை நிலையாமை முதலியவற்றை எடுத்துமொழியும் புறத்துறை ; முதுகாஞ்சித்துறை பற்றிய நூல்வகை . |
| முதுகாடு | பழங்காடு ; சுடுகாடு . |
| முதுகால் | ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத்தோட்டம் . |
| முதுகிடுதல் | புறங்காட்டுதல் . |
| முதுகு | உடம்பின் பின்புறம் ; முருடு ; நாற்காலி முதலியவற்றின் பின்புறம் ; நடுவிடம் ; வரப்புமேடு . |
| முதுகுகாட்டுதல் | காண்க : முதுகிடுதல் . |
| முதுகுகாணுதல் | தோல்வியுறச்செய்தல் . |
| முதுகுகொடுத்தல் | புறங்காட்டுதல் ; துணைசெய்தல் ; குதிரை முதலியன தன்மேலேற இடங்கொடுத்தல் ; விளையாட்டாகவும் தண்டனையாகவும் முதுகிற் பிறனைத் தூக்கிச் சுமத்தல் . |
| முதுகுடி | தொன்றுதொட்டுவரும் குடி . |
| முதுகுதாங்கி | சார்மணை . |
| முதுகுநீர்ச்சடங்கு | முதுகில் நீரூற்றிச் செய்யும் சீமந்தச்சடங்கு . |
| முதுகுநெளித்தல் | வேலைக்குச் சோம்புதல் . |
| முதுகுரவர் | தாய்தந்தையர் , பெற்றோர் . |
| முதுசொல் | பழமொழி . |
| முதுதலை | மரத்தின் முற்றிய அடிப்பாகம் . |
| முதுநிலம் | களர்நிலம் ; பெரும்பாழ்நிலம் ; பாலைநிலம் . |
| முதுநீர் | நிலத்துக்கு முன் தோன்றியதான கடல் . |
| முதுபயிர் | முற்றிய பயிர் ; கனி தரக்கூடிய மரம் ; காண்க : முதுகால் . |
| முதுபாலை | கணவனை இழந்த தலைவி காட்டில் தனிநின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை . |
| முதுபாழ் | காண்க : முதுநிலம் . |
| முதுபுண் | நெடுநாட்புண் . |
| முதுபெண்டு | காண்க : பேரிளம்பெண் ; சூதகம் நின்றுபோன பெண் ; வயதானவள் . |
| முதுபொருள் | மரபுவழிச்சொத்து . |
| முதுமக்கட்டாழி | இறந்தவரை இட்டுப் புதைக்கும் மட்பாண்டம் ; பெருந்தாழிவகை ; மிகவும் முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்கும் சாடிவகை . |
| முதுமக்கள் | வயதுசென்றோர் . |
| முதுமகள் | கிழவி ; சூதகம் நீங்கிய பெண் ; வயதானவள் . |
| முதுமகன் | வயது சென்றவன் ; முப்பதுக்கு மேற்பட்ட அகவையுள்ளவன் ; சனி . |
| முதுமரம் | ஆலமரம் . |
| முதுமுறை | மூத்த முறைமை . |
| முதுமூப்பு | மிக முதிர்ந்த வயது . |
| முதுமை | பழைமை ; மூப்பு ; பழமொழி ; முற்றின தன்மை ; காண்க : முதுகாஞ்சி . |
| முதுமொழி | பழமொழி ; அறிவுரை ; சான்றோர் செய்யுள் ; வேதம் ; பிரணவம் ; திருக்குறள் . |
| முதுமொழிவஞ்சி | மகன் தகப்பனுடைய வீரச்செயலைக் கூறும் புறத்துறை . |
| முதுவர் | மூத்தோர் ; அறிவால் உயர்ந்தோர் ; புலவர் ; மலைச்சாதியார் ; மந்திரிகள் . |
| முதுவல் | பழமையாற் பழுதானது . |
| முதுவேனில் | பருவம் ஆறனுள் ஆனி ஆடி மாதங்களாகிய கோடைக்காலம் . |
| முதுவோர் | பெரியோர் ; மூத்தோர் ; அறிவின் மிக்கோர் ; மந்திரிகள் ; அரசன் , ஆசிரியன் , தாய்தந்தை , அண்ணன் முதலியோர் ; புலவர் . |
| முதை | காண்க : முதைப்புனம் ; சங்கஞ்செடி . |
| முதைப்புனம் | பழங்கொல்லை ; காடுவெட்டிப் பயிரிடத்தக்கதாக அமைத்த நிலம் . |
| முதையல் | பழங்காடு ; காடு . |
| முந்தல் | முற்படல் ; முனை ; முச்சந்தி . |
| முந்தன் | கடவுள் . |
| முந்தாநாள் | நேற்றை என்பதற்கு முன்தினம் . |
| முந்தானை | காண்க : முன்றானை . |
| முந்தி | முன்னிடம் ; காண்க : முன்றானை ; முற்காலம் . |
| முந்திசினோர் | முன்னோர் . |
| முந்திரி | 1/320 ஐக் குறிக்கும் ஒரு பின்னவெண் ; முந்திரிகைமரம் ; மரவகை ; திராட்சை . |
| முந்திரிக்கொட்டை | முந்திரியின் விதை ; தேவையில்லாமல் எதிலும் தலையிடுபவன் . |
| முந்திரிகை | காண்க : முந்திரி . |
| முந்து | முற்காலம் ; ஆதி ; முன்பு ; வெண்ணாரை . |
| முந்துதல் | மேலெழுதல் ; விரைதல் ; எதிர்ப்படுதல் ; முதன்மையாதல் ; சிறத்தல் ; பழமையாதல் ; காலம் ; இடம் ; முதலியவற்றால் முற்படுதல் . |
| முந்துநூல் | முதனூல் ; வேதம் . |
| முந்துறுத்தல் | தோற்றுவித்தல் ; காட்டிக்கொள்ளுதல் ; ஒருவன் முன்னிலையில் அறிவித்தல் ; முதலாதல் . |
| முந்துறுதல் | முன்னிலையாதல் ; முற்படுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 891 | 892 | 893 | 894 | 895 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுக்குடி முதல் - முந்துறுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பெண், புறத்துறை, பழமொழி, மூத்தோர், வேதம், வயது, சூதகம், கூறும், வயதானவள், புலவர், முந்திரி, முற்படுதல், முற்காலம், முன்றானை, மந்திரிகள், முதைப்புனம், முதுநிலம், புறங்காட்டுதல், பேரறிவு, தெருளுகை, பேதைமை, முதுக்குறைமை, முதுகுடி, கடல், முதுகாஞ்சி, முதுகிடுதல், பின்புறம், மேற்பட்ட, முதுகால், பழங்காடு, முற்றிய

