தமிழ் - தமிழ் அகரமுதலி - முதல¦ற்று முதல் - முது வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
முதல¦ற்று | முதன்முதலாக ஈனுகை ; தலையீற்றுக் கன்று . |
முதலுதல் | முதலாதல் ; தலைமையாதல் ; தொடக்கமுடையதாதல் . |
முதலூழி | கிருதயுகம் . |
முதலெழுஞ்சனி | மகநாள் . |
முதலெழுத்து | உயிரும் மெய்யுமாகிய முப்பதெழுத்து . |
முதலை | நீர்வாழ் உயிரி ; காண்க : செங்கிடை ; இறகின் அடிக்குருத்து . |
முதலோன் | கடவுள் . |
முதள் | மொக்கு . |
முதற்கடவுள் | பரதெய்வம் . |
முதற்கடன் | தலைமையான கடமை ; உழவுத் தொழிலுக்காக முன்கொடுக்கும் பணம் . |
முதற்கருவி | மத்தளம் ; காண்க : முதற்காரணம் . |
முதற்காரணம் | காரிய நிகழ்ச்சிக்கு இன்றியமையாத காரணம் . |
முதற்காலம் | இசையின் தொடக்ககாலம் ; கோயிலிற் காலையிற் செய்யும் முதற்பூசை . |
முதற்குறை | சொல்முதலில் எழுத்துக் குறைந்துவரும் செய்யுள் விகாரவகை ; செயல்தொடக்கத்தில் குறை ; முதலாவதாயுள்ள தேவை . |
முதற்கைகொடுத்தல் | கையால் தழுவி அன்புகாட்டுதல் . |
முதற்கொடி | இளந்தளிர் . |
முதற்கொண்டு | தொடங்கி . |
முதற்சங்கம் | முச்சங்கங்களுள் முதலாவது . |
முதற்சீர் | ஈரசைச்சீர் . |
முதற்பா | வெண்பா . |
முதற்பெயர் | உறுப்புகளையுடைய முழுப்பொருளைக் குறிக்கும் பெயர் . |
முதற்பேறு | தலைப்பிள்ளை ; முதற்பலன் . |
முதற்பொருள் | கடவுள் ; மூலதனம் ; அகப்பொருட்குரிய நிலம் பொழுதுகளின் இயல்பு ; காண்க : முதற்பெயர் . |
முதன்மடை | முதலில் நீர்பாயும் நிலம் ; தலைவாய்க்கால் . |
முதன்முதல் | தொடக்ககாலம் . |
முதன்முன்னம் | தொடக்கம் . |
முதன்மை | தலைமை . |
முதனடை | இயக்கம் நான்கனுள் மிகத் தாழ்ந்த செலவினையுடைய பாடல் . |
முதனா | நாக்கின் அடிப்பாகம் . |
முதனாள் | அசுவினிநாள் ; முதல் நாள் ; முந்தின நாள் . |
முதனிலை | முதலில் நிற்பது ; காரணம் ; பகுதி ; தலைவாயில் . |
முதனிலைத்தீவகம் | ஒரு சொல் பாடலின் முதலில் நின்று குணம் முதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள்விளக்கும் விளக்கணிவகை . |
முதனிலைத்தொழிற்பெயர் | தன்னியல்பின் மாறாத வினைப்பகுதியே தொழிற்பெயராக நிற்பது . |
முதனிலைவிளக்கு | காண்க : முதனிலைத்தீவகம் . |
முதனினைப்பு | நூல் அல்லது உதாரணப் பாடல்களை நினைப்பூட்டும் அப் பாடல்களின் முதற்குறிப்புச் செய்யுள் . |
முதனீர் | கடல் . |
முதனூல் | முதல்வன் வாக்கு ; மறை ; பிறநூலைப் பின்பற்றாது முதலில் செய்யப்படும் நூல் ; வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல் . |
முதாரி | முதுமையுறுகை ; காண்க : முதாரு ; முற்றியது ; முன்கை வளையல் . |
முதாரு | பால்மறக்குங் கன்று ; பால் மறுக்கும் நிலையிலுள்ள பசு . |
முதிதபாவனை | செற்றத்தை நீக்கும்பொருட்டுப் பௌத்தர்களால் செய்யப்படும் தியானம் . |
முதிதை | மகிழ்ச்சி ; மனத்தூய்மை ; தியானம் . |
முதியகுழல் | குதிரைவாலிப் புல் . |
முதியம் | நாய்வேளைப்பூண்டு . |
முதியவன் | மூத்தவன் ; வயதுமுதிர்ந்தவன் ; பிரமன் . |
முதியன் | மூத்தவன் ; வயதுமுதிர்ந்தவன் ; பிரமன் . |
முதியாள் | மூத்தவள் ; காண்க : தேவராட்டி . |
முதியான் | ஒரு பறவைவகை ; முதியவன் ; முதுகன்று . |
முதியோர் | அறிஞர் . |
முதிர்காடு | பழங்காடு . |
முதிர்காற்று | கடுங்காற்று . |
முதிர்ச்சி | பக்குவம் ; வயதின் முதுமை ; முதுக்குறைவு ; செருக்கு . |
முதிர்தல் | இளமைத்தன்மை நீங்கி முற்றுதல் ; பக்குவமாதல் ; நிறைதல் ; முற்படுதல் ; ஒழிதல் ; உலர்தல் ; சூழ்தல் . |
முதிர்ந்தகுறிஞ்சி | ஒரு பண்வகை . |
முதிர்ந்தவிந்தளம் | குறிஞ்சி யாழ்த்திறவகை . |
முதிர்ப்பு | மனக்கலக்கம் ; பக்குவம் ; வயதின் முதுமை . |
முதிர்பு | பக்குவம் ; வயதின் முதுமை ; மிகுதி . |
முதிர்வு | பக்குவம் ; வயதின் முதுமை ; மிகுதி . |
முதிர்வேனில் | பருவம் ஆறனுள் ஆனி ஆடி மாதங்களாகிய கோடைக்காலம் . |
முதிரம் | மேகம் ; குமணனுக்குரிய மலை . |
முதிரன் | காமுகன் . |
முதிராப்பிண்டம் | முற்றாத கரு . |
முதிரை | அவரை ,துவரை முதலியன ; துவரம்பருப்பு ; மரவகை . |
முது | பேரறிவு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 890 | 891 | 892 | 893 | 894 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல¦ற்று முதல் - முது வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பக்குவம், முதலில், வயதின், முதுமை, நூல், தியானம், முதாரு, செய்யப்படும், பிரமன், மிகுதி, வயதுமுதிர்ந்தவன், மூத்தவன், முதியவன், நிற்பது, காரணம், முதற்காரணம், கடவுள், கன்று, தொடக்ககாலம், செய்யுள், சொல், நாள், நிலம், முதற்பெயர், முதனிலைத்தீவகம்