முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முத்தங்கொள்ளுதல் முதல் - முத்து வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முத்தங்கொள்ளுதல் முதல் - முத்து வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முத்தங்கொள்ளுதல் | காண்க : முத்தமிடுதல் ; பொருந்துதல் ; புல்லுதல் . |
| முத்தண்டு | முக்கோல் . |
| முத்தந்தருதல் | அன்பிற்கறிகுறியாக கன்னம் முதலியவற்றில் முத்தமிடுதல் . |
| முத்தம் | உதடு ; அன்பிற்கறிகுறியாக ஒருவகை ஒலி உண்டாக உதடுகளால் தொடுகை ; பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையை முத்தந் தரும்படியாகப் பாடும் பகுதி ; மருதநிலம் ; முத்து ; முத்துக்கொட்டை ; செடிவகை ; மரகதக் குணங்களுள் ஒன்று ; ஆண்குறி : அன்பு ; மகிழ்ச்சி ; யோகாசனவகை ; முற்றம் ; கோரைக்கிழங்கு ; விடுதலை ; கோரை . |
| முத்தமாலை | காண்க : முத்துமாலை . |
| முத்தமிடுதல் | அன்பிற்கறிகுறியாக உதடுகளால் கன்னம் முதலியவிடங்களில் தொடுகை . |
| முத்தமிழ் | இயல் , இசை , நாடகம் என்னும் மூவகைத் தமிழ் . |
| முத்தமிழுரியோன் | அகத்தியன் ; வயிரவன் . |
| முத்தமுண்ணுதல் | காண்க : முத்தமிடுதல் . |
| முத்தர் | திடர் . |
| முத்தரை | அரையிலணியும் முத்துவடம் . |
| முத்தலை | சூலம் . |
| முத்தலைக்கழு | சூலம் . |
| முத்தலைவேல் | சூலம் . |
| முத்தலைவேலோன் | பைரவன் . |
| முத்தவள்ளி | முத்துக்கோத்த கொடிபோன்ற கழுத்தணி . |
| முத்தவி | ஆமணக்கெண்ணெய் . |
| முத்தழல் | காண்க : முத்தீ . |
| முத்தளகி | முருங்கைமரம் . |
| முத்தன் | வீடுபேறடைந்தோன் ; இயல்பாகவே தளைகளிலிருந்து நீங்கியவனான சிவபிரான் ; திருமால் ; அருகன் ; வயிரவன் ; பிரியன் ; மூடன் ; புத்தன் . |
| முத்தாடுதல் | முத்தமிடுதல் . |
| முத்தாத்துக்கோல் | தூக்குக்கோல் . |
| முத்தாத்துமா | வீடுபெற்ற உயிர் . |
| முத்தாந்தம் | வீடுபேறாகிய உயர்நிலை . |
| முத்தாபலம் | முத்து ; காண்க : சங்கஞ்செடி . |
| முத்தாமணக்கு | ஓர் ஆமணக்கஞ்செடிவகை . |
| முத்தாரம் | முத்துமாலை . |
| முத்தாவளி | முத்துமாலை ; ஒரு பண்வகை . |
| முத்தானம் | அடுப்பு . |
| முத்தி | வீடுபேறு ; விடுபடுகை ; இருவகை முத்திநிலை ; திசை ; முத்தம் ; திருமகள் ; தேமல் . |
| முத்திக்கை | அரண்வளைப்பு . |
| முத்திதசை | பற்றுகளினின்று விடுபட்ட நிலை . |
| முத்திநகரங்கள்ஏழு | மதுரை , அயோத்தி , மாயை , காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை ஆகிய நகரங்கள் . |
| முத்திநெறி | வீட்டுநெறி . |
| முத்திப்பேறு | வீட்டுவாழ்வு . |
| முத்திபதம் | மோட்சபதவி ; ஞானநிலை . |
| முத்திமார்க்கம் | வீட்டுநெறி ; கருமவிதி மார்க்கம் . |
| முத்திமுத்திரை | தாமிரபரணி ஆறு . |
| முத்திமுதல் | முத்தியைப் பெறுதற்கு முதலாகிய ஆன்மா . |
| முத்தியெறிதல் | கழித்தல் . |
| முத்திராசாலை | அச்சுக்கூடம் . |
| முத்திராதாரணம் | சங்கு , சக்கரம் முதலிய முத்திரைகளை உடலில் ஏற்றுக்கொள்கை . |
| முத்திரிகை | எழுத்துப் பதிக்கப்பெற்ற மோதிரம் . |
| முத்திரித்தல் | முத்திரையிடுதல் . |
| முத்திரை | அடையாளம் ; இலாஞ்சனை ; அஞ்சல் முத்திரை முதலியன ; அடையாள வில்லை ; நூல் இறுதியில் வரும் ஆக்கியோன் பெயர்ப்பதிவு ; காதிலணியும் குண்டலவகை ; அபிநயக்குறி ; பூசை செய்யும்போது காட்டும் கையடையாளம் ; வங்கியம் நாகசுரம் வாசிக்கும்போது தொழிற்படாத துளை . |
| முத்திரைக்கூடம் | காவலறை ; பண்டங்களின் மேல் முத்திரையிடும் இடம் . |
| முத்திரைச்சூடு | கால்நடைகளுக்கு இடும் சூடு . |
| முத்திரைச்சேவகன் | வில்லைச்சேவகன் . |
| முத்திரைத்தாள் | முத்திரையிடப்பட்ட பத்திரம் . |
| முத்திரைப்படி | அரசாங்க அடையாளமிடப்பட்ட படி . |
| முத்திரைமண் | தானியக் குவியலில் இடும் மண்குறி ; முத்திரையிடுதற்குரிய மண் முதலிய பொருள் . |
| முத்திரைமோதிரம் | முத்திரையிட்ட மோதிரம் . |
| முத்திரையுட்சிக்கு | நாணய முத்திரையில் உள்ள குறைவகை . |
| முத்திறங்குதல் | அம்மையில் முத்துகள் பால் வடிந்து மறைகை . |
| முத்திறமணி | காண்க : திரிமணி . |
| முத்தீ | ஆகவனீயம் , தட்சிணாக்கினி , காருகபத்தியம் என்னும் மூவகை வேதாக்கினி ; வயிற்றுத்தீ , காமத்தீ , சினத்தீ என்னும் மூவகை நெருப்பு ; காண்க : ஆயுர்வேதாக்கினி . |
| முத்தீமரபினர் | வேதாக்கினி மூன்றையும் பேணும் குலத்தவராகிய பார்ப்பனர் . |
| முத்து | ஒன்பான் மணியுள் ஒன்று ; கண்ணீர் ; ஆமணக்குவிதை ; அம்மைக்கொப்புளம் ; நெய்யுள்ள விதை ; மாதுளையின் விதை ; அரிசி ; 7/8 பணவெடைகொண்ட ஒரு பொன்னிறை ; ஆட்டக்காய்கள் ; மேலானது ; அழகு ; மகிழ்ச்சி ; அன்பு ; முத்தம் ; வெண்குருகு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 888 | 889 | 890 | 891 | 892 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்தங்கொள்ளுதல் முதல் - முத்து வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முத்தமிடுதல், என்னும், சூலம், முத்து, முத்துமாலை, முத்தம், அன்பிற்கறிகுறியாக, முத்திரை, மோதிரம், முதலிய, இடும், மூவகை, விதை, வேதாக்கினி, வீட்டுநெறி, முத்தீ, மகிழ்ச்சி, அன்பு, உதடுகளால், கன்னம், தொடுகை, வயிரவன், ஒன்று

