தமிழ் - தமிழ் அகரமுதலி - முடவுதல் முதல் - முடிவுபோதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முடவுதல் | நொண்டுதல் . |
| முடி | முடிச்சு ; உச்சியில் முடித்தல் ; குடுமி ; மயிர் ; தலை ; உச்சி ; தலையணி ; முடிவு ; நாற்றுமுடி ; பறவைபடுக்குங் கண்ணி ; தேங்காய்க் குடுமி ; தேங்காயிற் பாதி ; காண்க : துளசி . |
| முடிக்கண்ணி | காண்க : முடிமாலை . |
| முடிக்கலம் | கிரீடம் . |
| முடிக்காணிக்கை | தெய்வவேண்டுதலின் பொருட்டு வளர்த்த மயிர்முடியைக் கழித்துக் காணிக்கையாகத் தருதல் . |
| முடிகவித்தல் | காண்க : முடிசூட்டுதல் . |
| முடிச்சவிழ்க்கி | காண்க : முடிச்சுமாறி . |
| முடிச்சவிழ்த்தல் | திருடுதல் ; முடிச்சை அவிழ்த்தல் . |
| முடிச்சாத்து | தலைப்பாகை . |
| முடிச்சு | முடியப்பட்டது ; கண்டறிந்து தீர்த்தற்குரிய தந்திரம் ; முட்டு ; கட்டு ; மயிர்முடி ; சிறு மூட்டை ; கணு : மகளிர் காதணிவகை . |
| முடிச்சுப்போடுதல் | சண்டைமூட்டுதல் ; சம்பந்தப்படுத்துதல் ; இணைத்தல் . |
| முடிச்சுமாறி | திருடன் ; முடிச்சை அவிழ்ப்பவன் . |
| முடிசாய்த்தல் | படுத்துக்கொள்ளுதல் ; வணங்குதல் ; ஒரு பக்கமாய்த் தலையைச் சாய்த்தல் . |
| முடிசாய்தல் | இறத்தல் . |
| முடிசூட்டுதல் | அரசுக்குரிய முடியணிதல் . |
| முடித்தகேள்வி | கரைகண்ட கேள்வி . |
| முடித்தல் | முற்றுவித்தல் ; நிறைவேற்றுதல் ; அழித்தல் ; கட்டுதல் ; சூட்டுதல் . |
| முடித்துக்காட்டல் | மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது . |
| முடித்துக்கொடுத்தல் | நிறைவேற்றித் தருதல் . |
| முடிதரித்தல் | காண்க :முடிசூட்டுதல் . |
| முடிதல் | முற்றுப்பெறுதல் ; நிறைவேறுதல் ; அழிதல் ; சாதல் ; தோன்றுதல் ; இயலுதல் ; சண்டைமூட்டுதல் ; சம்பந்தப்படுத்துதல் ; முடிச்சிடுதல் ; சூடுதல் . |
| முடிதீட்டுதல் | வணங்குதல் . |
| முடிதுளக்குதல் | தலையசைத்தல் ; வணங்குதல் . |
| முடிந்தகணம் | நிகழ்காலம் . |
| முடிந்தகொள்கை | முடிவான தீர்மானம் . |
| முடிந்ததுமுடித்தல் | சிறப்பு வாய்பாட்டால் முடிந்ததைப் பொதுவாய்பாட்டால் முடித்துக்காட்டும் நூல் உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று . |
| முடிந்தபொழுது | முதிர்ந்த பருவம் ; இயன்ற போது . |
| முடிநடை | தலையால் நடக்கை . |
| முடிநர் | கட்டுபவர் . |
| முடிநாதம் | காண்க : இந்திரகோபம் . |
| முடிநாறு | நாற்றுமுடி . |
| முடிபிசைக்குறி | சொற்றொடரின் முடிவைக் காட்டும் முற்றுப்புள்ளி . |
| முடிப்பு | முடிபோடுகை ; முடிச்சு ; கட்டு ; தலையிலணியும் பொருள் : பணமுடிச்சு ; சொத்து ; மொத்தத்தொகை : தீர்மானம் ; முடிவு . |
| முடிப்புக்கட்டுதல் | முடிவுசெய்தல் ; பணமுடிப்புச் சேர்த்துவைத்தல் . |
| முடிபு | காண்க : முடிவு . |
| முடிபெழுத்து | எழுத்துவகைகளுள் ஒன்று . |
| முடிபொருட்டொடர்நிலை | காப்பியம் . |
| முடிபோடுதல் | ஒன்றோடொன்று மாட்டிப் பிணைத்தல் ; கணவன் மனைவியர் ஆவதற்கு விதியமைதல் . |
| முடிமணி | கலைமணி ; சூடாமணி . |
| முடிமயிர் | சேர்த்துமுடித்த தலைமயிர் ; மகளிர் தலைமயிரோடு சேர்த்துமுடியும் கட்டுமயிர் , இடுமயிர் ; தெய்வத்துக்குக் காணிக்கையாகமழித்து இடும் தலைமயிர் . |
| முடிமார் | முடிப்பவர் . |
| முடிமாலை | தலையில் அணியும் மாலை . |
| முடிமேலழகி | கோடகசாலைப்பூண்டு . |
| முடிய | முழுதும் . |
| முடியரசன் | முடிசூடிய மன்னன் . |
| முடியல் | எல்லாம் . |
| முடியிறக்குதல் | வேண்டுதலுக்காக மயிர்கழித்தல் ; அவமானஞ் செய்தல் . |
| முடியுயர்தல் | அரசு செழித்தல் . |
| முடியுலகம் | மேலுலகம் . |
| முடியுலகு | மேலுலகம் . |
| முடியுறுப்பு | தாமம் , முகுடம் , பதுமம் , கோடகம் , கிம்புரி என்னும் ஐவகையான மகுட வகுப்புகள் . |
| முடியெடுத்தல் | தலைமயிர் நீக்குதல் ; தலையெடுத்தோங்குதல் ; அவமானஞ் செய்தல் . |
| முடிவறிதல் | நன்றாக உணர்தல் . |
| முடிவாங்குதல் | காண்க : முடியிறக்குதல் . |
| முடிவிடங்கூறல் | தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதிகூறும் இடத்தைக் குறிப்பது . |
| முடிவிலாற்றல் | சிவன் எண்குணத்துள் ஒன்றாகிய அளவிலா ஆற்றல் . |
| முடிவிலாற்றலுடைமை | சிவன் எண்குணத்துள் ஒன்றாகிய அளவிலா ஆற்றல் . |
| முடிவினை | ஊழ்வினை . |
| முடிவு | இறுதி ; எல்லை ; தீர்மானம் ; முடிவான உட்கோள் ; நிறைவு ; பயன் ; இசைப் பாகுபாடு ; சாவு . |
| முடிவுகட்டுதல் | தீர்மானித்தல் . |
| முடிவுகாலம் | இறுதிக்காலம் . |
| முடிவுசொல்லுதல் | தீர்ப்புச்சொல்லுதல் . |
| முடிவுபோக்குதல் | நிறைவேற்றுதல் . |
| முடிவுபோதல் | நிறைவேறுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 886 | 887 | 888 | 889 | 890 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடவுதல் முதல் - முடிவுபோதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முடிவு, முடிச்சு, தீர்மானம், தலைமயிர், முடிசூட்டுதல், வணங்குதல், அவமானஞ், செய்தல், முடியிறக்குதல், முடித்தல், ஒன்று, மேலுலகம், சிவன், ஆற்றல், அளவிலா, ஒன்றாகிய, எண்குணத்துள், குடுமி, முடிவான, கட்டு, முடிச்சை, முடிச்சுமாறி, முடிமாலை, மகளிர், சண்டைமூட்டுதல், நிறைவேறுதல், நிறைவேற்றுதல், நாற்றுமுடி, சம்பந்தப்படுத்துதல், தருதல்

