முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முச்சொல்லலங்காரம் முதல் - முட்டிக்கால் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முச்சொல்லலங்காரம் முதல் - முட்டிக்கால் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
முச்சொல்லலங்காரம் | ஒரு தொடர் மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள்கொண்டு நிற்கும் சொல்லணிவகை . |
முசகம் | எலி . |
முசர் | தயிர் ; மோர் . |
முசரு | தயிர் ; மோர் . |
முசல் | முயல் ; கொம்மட்டி ; ஒரு பூண்டுவகை . |
முசல்வலி | ஒரு வலிப்புநோய்வகை . |
முசலகன் | நடராசப் பெருமான் ஏறி நடித்து மிதிக்கும் பூதம் ; ஒரு நோய்வகை . |
முசலம் | உலக்கை ; ஓர் ஆயுதம் . |
முசலி | உடும்பு ; பல்லி ; முதலை ; கடல்மீன் ; நிலப்பனை ; வெருகங்கிழங்கு ; தாழைமரம் ; முசலத்தையுடைய பலராமன் ; பச்சோந்தி . |
முசலிகை | உடும்பு ; இரண்டு கையும் காலும் சம்மணம் கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை . |
முசலை | கோரைக்கிழங்கு . |
முசற்காது | மருந்துப்பூண்டு ; அடப்பங்கொடி . |
முசாதகம் | வெண்டாமரை . |
முசிகுந்தம் | குபேரன் வில் ; சூரியன் கைச்சங்கு . |
முசித்தல் | களைத்தல் ; இடர்ப்படுதல் ; மெலிதல் ; அழிதல் ; கசக்குதல் ; திருகுதல் . |
முசிதல் | அறுதல் ; கசங்குதல் ; களைத்தல் : மெலிதல் ; அழிதல் ; குன்றுதல் . |
முசிப்பாற்றி | இளைப்பாற்றுகை . |
முசிப்பாறுதல் | இளைப்பாறுதல . |
முசிப்பு | இடை ; மெலிவு ; களைப்பு ; அழிவு . |
முசிரம் | வள்ளல்தன்மை . |
முசிரன் | கொடையாளி . |
முசிறு | காண்க : முசுறு ; கருங்குரங்குவகை . |
முசு | கருங்குரங்கு ; திமில் . |
முசுக்கட்டை | பட்டுப்பூச்சி வாழும் மரம் ; கம்பளிப்பூச்சி ; மரவகை . |
முசுக்கட்டைப்பூச்சி | கம்பளிப்பூச்சிவகை . |
முசுட்டை | ஒரு கொடிவகை . |
முசுடர் | காண்க : முசுண்டர் . |
முசுடி | நொடி ; கோபக்காரி . |
முசுடு | காண்க : முசிறு . |
முசுண்டர் | கீழ்மக்கள் . |
முசுண்டி | ஆயுதவகை . |
முசுண்டை | ஒரு கொடிவகை . |
முசுப்பதி | போர்வீரர் உறையுமிடம் . |
முசுப்பு | திமில் . |
முசுமுசுக்கை | ஒரு மருந்துக்கொடிவகை . |
முசுமுசுத்தல் | குறட்டைவிடல் ; நீர் முதலியன கொதித்தல் ; தினவெடுத்தல் ; உறிஞ்சுதல் . |
முசுமுசெனல் | தினவுக்குறிப்பு ; நீர் முதலியன கொதித்தற்குறிப்பு . |
முசுறு | செந்நிற எறும்பு ; கடுகடுப்புள்ளவர் . |
முஞ்சகேசன் | திருமால் . |
முஞ்சகேசி | திருமால் . |
முஞ்சம் | குழந்தைகளின் தலையணிவகை . |
முஞ்சரம் | தாமரைக்கிழங்கு . |
முஞ்சி | நாணற்புல் ; பார்ப்பனப் பிரமசாரிகள் அரையிற் கட்டும் நாணற்கயிறு . |
முஞ்சுதல் | சாதல் ; முடிதல் . |
முஞ்ஞை | மரவகை . |
முஞல் | கொசு . |
முட்கரம் | ஓர் ஆயுதவகை . |
முட்கீரை | ஒரு கீரைவகை . |
முட்கோல் | குதிரையைத் தூண்டும் தாற்றுக்கோல் . |
முட்சங்கு | முள்ளுள்ள சங்குவகை ; சங்கஞ்செடி . |
முட்செவ்வந்தி | ரோசா , நிலத்தாமரை . |
முட்ட | முழுதும் ; மிகவும் . |
முட்டடி | அண்மை ; நெருக்கம் . |
முட்டத்தட்டுதல் | முழுதும் பறித்தல் ; முழுதும் இல்லையாதல் . |
முட்டத்தனம் | மூடத்தன்மை . |
முட்டம் | ஊர் ; பக்கம் ; காக்கை ; காண்க : முட்டான் ; ஒரு திருமால் தலம் . |
முட்டமுடிய | காண்க : முட்ட . |
முட்டாக்கிடுதல் | முகத்தைப் போர்த்தல் ; உள்ளடக்குதல் . |
முட்டாக்கு | தலைமூடுசீலை ; போர்வை . |
முட்டாட்டம் | முட்டுகை ; முட்டாள்தன்மை ; செருக்கு . |
முட்டாள் | மூடன் ; கொத்துவேலைச் சிற்றாள் ; ஊர்தியின் அடியில் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் பதுமை . |
முட்டாள்வேலை | மூடச்செயல் . |
முட்டாறு | காண்க : முட்கோல் . |
முட்டான் | அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம் ; திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை . |
முட்டி | விரல் முடக்கிய கை ; கைக்குத்து ; அபிநயவகை ; கைப்பிடியளவு ; பிச்சை ; ஆயுதம் பிடிக்கும்வகை ; அறுபத்துநான்கு கலைகளுள்கையுள் மறைத்ததை இன்னதென்று அறிந்து கூறும் வித்தை ; ஒரு பலம் அளவு ; சிறுபானை ; பலிச்சோறு ; வெல்லம் ; செங்கலின் துண்டு ; சிற்றாமுட்டி பேராமுட்டிகள் ; காண்க : பேய்க்கொம்மட்டி ; சிப்பிவகை ; வரிவகை ; நஞ்சு தீர்க்கும் மந்திர சிகிச்சைவகை . |
முட்டிக்கால் | முழங்காற்சிப்பி ; முட்டிக்காற்பின்னல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 884 | 885 | 886 | 887 | 888 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முச்சொல்லலங்காரம் முதல் - முட்டிக்கால் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, திருமால், முழுதும், முசுண்டர், ஆயுதவகை, நீர், முதலியன, முட்கோல், வைக்கும், முட்டான், முட்ட, கொடிவகை, மரவகை, களைத்தல், உடும்பு, ஆயுதம், மோர், மெலிதல், அழிதல், திமில், முசுறு, முசிறு, தயிர்