தமிழ் - தமிழ் அகரமுதலி - மலைநாடன் முதல் - மலைவீரியம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மலைநாடன் | மலைவளமுடைய நாட்டுக்கு அரசன் ; சேரன் . |
| மலைநாடு | மலைப்பாங்கான நாடு ; சேரநாடு . |
| மலைநாதம் | கன்மதம் ; சகஸ்பரபேதி ; வக்கிராந்த பாடாணம் . |
| மலைநார் | காண்க : கல்நார் . |
| மலைநெல் | நெல்வகை . |
| மலைப்பக்கம் | மலையின் சரிவான பாகம் . |
| மலைப்பச்சை | ஒரு செடிவகை . |
| மலைப்பள்ளி | அருந்தவர் வாழும் மலையிடம் . |
| மலைப்பாம்பு | ஒரு பாம்புவகை . |
| மலைப்பாழி | காண்க : மலைக்குகை . |
| மலைப்பிஞ்சு | சிறுகல் . |
| மலைப்பிளப்பு | மலையில் உள்ள விடர் . |
| மலைப்பிறங்கம் | உலோகமணல் . |
| மலைப்பு | அறிவுமயக்கம் ; திகைப்பு ; போர் ; மாறுபாடு ; கூத்தின் விகற்பம் ; மயக்கம் ; சம்பிரமம் . |
| மலைப்புறம் | காண்க : மலைச்சார்பு(வு) . |
| மலைப்புனம் | தினைவிளையும் நிலம் . |
| மலைபடுபொருள் | மலையில் உண்டாகும் மிளகு , கோட்டம் , அகில் , தக்கோலம் , குங்குமம் என்னும் ஐவகை மணப்பண்டம் . |
| மலைமகள் | பார்வதி . |
| மலைமஞ்சி | பெருங்குரும்பை எனும் செடிவகை . |
| மலைமடந்தை | காண்க : மலைமகள் . |
| மலைமதம் | கன்மதம் . |
| மலைமல்லிகை | காட்டுமல்லி , மரமல்லிகை . |
| மலைமாது | காண்க : மலைமகள் . |
| மலைமான் | காண்க : மலைமகள் . |
| மலைமுழக்கு | மலையினின்று கேட்கும் எதிரொலி . |
| மலைமுழை | காண்க : மலைக்குகை . |
| மலைமுழைஞ்சு | காண்க : மலைக்குகை . |
| மலைய | ஓர் உவம வாய்ப்பாடு . |
| மலையக்கால் | பொதியமலையிலிருந்து வரும் தென்றற்காற்று . |
| மலையசம் | சந்தனமரம் ; தென்றற்காற்று ; மலையாடு . |
| மலையடி | தாழ்வரை ; சேவற்கோழி ; கொங்கு வேளாளர் . |
| மலையடிப்படி | குறிஞ்சிநிலத்தூர் . |
| மலையடிவாரம் | தாழ்வரை . |
| மலையப்பொருப்பன் | பாண்டியன் . |
| மலையம் | மலையினுச்சி ; குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று ; பொதியமலை . |
| மலையமாருதம் | காண்க : மலையக்கால் . |
| மலையமான் | சேரன் ; உடையார்சாதியின் உட்பிரிவினர் ; மலாடு ஆளும் அரசன் . |
| மலையமானாடு | செந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு . |
| மலையரசன் | மலைநாட்டுக்கு அரசன் ; மலாடு ஆளும் அரசன் ; இமயமலைக்கு அரசன் . |
| மலையரண் | அரண் நான்கனுள் ஒன்றான மலையாகிய காப்பிடம் ; மலைமேற்கோட்டை . |
| மலையருவி | மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி . |
| மலையரையன் | காண்க : மலையரசன் . |
| மலையன் | குறிஞ்சிநிலத் தலைவன் ; சேர மன்னன் ; கடையெழு வள்ளலுள் ஒருவனான காரி ; தமிழ்நாட்டுப் பணிக்கச் சாதியினர் . |
| மலையாட்டி | மலைநாட்டுப் பெண் . |
| மலையாரம் | சந்தனமரம் . |
| மலையாள் | காண்க : மலைமகள் . |
| மலையாளபகவதி | மந்திரங்களுக்கு அதிதேவதையாகக் கருதப்படும் துர்க்காதேவி ; பெருமோசக்காரன் . |
| மலையாளர் | மலைநாட்டார் . |
| மலையாளி | மலையில் வாழ்பவன் ; மலையாள நாட்டான் ; வேளாள வகுப்பின் ஒரு பிரிவினர் ; மிளகு . |
| மலையானிலம் | காண்க : மலையக்கால் . |
| மலையிடறு | பெருந்தடை . |
| மலையிலக்கு | வெளிப்படையானது . |
| மலையிறக்கம் | மலையின் இறங்குசரிவு . |
| மலையின்முனிவன் | அகத்திமரம் ; மிளகு ; அத்திவகை . |
| மலையீந்து | ஒரு மரவகை . |
| மலையேறுதல் | தெய்வம் இடத்தினின்று நீங்குதல் ; முடிவடைதல் ; மாவிளக்கு நெய்யற்று அணைந்துபோதல் ; மலையின்மேல் ஏறுதல் . |
| மலைவசம்பு | ஒரு செடிவகை ; மிளகு . |
| மலைவட்டை | ஒரு மரவகை . |
| மலைவமைதி | இடம் , காலம் , கலை முதலிய அறுவகை மலைவும் சில காரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்து கொள்ளப்படுவது . |
| மலைவளம் | மலைநிலத்தின் செழிப்பு ; காண்க : மலைபடுபொருள் . |
| மலைவளர்காதலி | காண்க : மலைமகள் . |
| மலைவாசம் | மிளகு ; உடல்நலம் கருதி மலையிற் சென்று வசிக்கை . |
| மலைவாசி | மலையில் வாழ்பவர் ; மலையில் வாழ்வது . |
| மலைவாசிக்கொம்பு | பன்றிக்கொம்பு . |
| மலைவாணர் | மலைவாழ்நர் . |
| மலைவாழை | ஒரு வாழைவகை . |
| மலைவீரியம் | அன்னபேதி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 855 | 856 | 857 | 858 | 859 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைநாடன் முதல் - மலைவீரியம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மலைமகள், அரசன், மலையில், மிளகு, மலையக்கால், மலைக்குகை, செடிவகை, மரவகை, தாழ்வரை, மலையரசன், ஆளும், மலாடு, சந்தனமரம், மலைபடுபொருள், சேரன், நாடு, கன்மதம், மலையின், தென்றற்காற்று

