தமிழ் - தமிழ் அகரமுதலி - மலர்ச்சி முதல் - மலைதாங்கி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மலர்ச்சி | பொலிவு ; மகிழ்ச்சி ; மலர்தல் . |
| மலர்த்தல் | நிமிரச்செய்தல் ; மலரச்செய்தல் . |
| மலர்த்தாது | காண்க : பூந்தாது . |
| மலர்த்தாள் | காண்க : மலர்க்காம்பு . |
| மலர்த்திரள் | பூங்கொத்து . |
| மலர்த்துதல் | மலரச்செய்தல் ; மூடிய கை ; குடை முதலியவற்றை விரித்துத் திறத்தல் ; மல்லாத்துதல் . |
| மலர்த்தூள் | பூந்தாது . |
| மலர்த்தேவி | காண்க : மலர்மகள் . |
| மலர்த்தேன் | பூவிலுண்டாகும் தேன் ; பூந்தாது தங்குமிடம் . |
| மலர்தல் | பூவின் மொட்டவிழ்தல் ; பரத்தல் ; மனமகிழ்தல் ; தோன்றல் ; எதிர்தல் ; அகலுதல் ; மிகுதல் . |
| மலர்தொடுத்தல் | பூவை இணைத்துக் கட்டுதல் . |
| மலர்ப்பலி | கைநிறையக் கொண்டு வழிபாடாக இடும் பூ . |
| மலர்ப்பள்ளி | பூவாலாகிய படுக்கை . |
| மலர்ப்பு | மலர்விக்கை ; வெளிப்படக் காட்டுகை . |
| மலர்மகள் | திருமகள் . |
| மலர்மங்கை | திருமகள் . |
| மலர்மண்டபம் | பூத்தொடுக்கும் மண்டபம் . |
| மலர்மிசைநடந்தான் | தாமரைப்பூவில் நடந்த அருகன் ; பரம்பொருள் . |
| மலர்மிசையேகினான் | தாமரைப்பூவில் நடந்த அருகன் ; பரம்பொருள் . |
| மலர்மிசையோன் | தாமரையிலிருப்பவனான பிரமன் . |
| மலரகிதர் | மும்மலம் நீங்கப்பெற்றவர் . |
| மலரடி | பெரியார் அல்லது தெய்வத்தின் தாமரைபோன்ற திருவடி . |
| மலரணை | காண்க : மலர்ப்பள்ளி . |
| மலரவன் | காண்க : மலரோன் . |
| மலருக்குநாயகம் | கருவண்டு . |
| மலரோன் | காண்க : மலர்மிசையோன் . |
| மலவாசயம் | காண்க : மலப்பை . |
| மலவாயில் | உடலினின்றும் மலங்கழியும் வழி . |
| மலவைரி | சிவபிரான் . |
| மலாகை | தூதுசெல்பவள் ; காமமிக்கவள் ; பெண்யானை . |
| மலாசு | காண்க : சிறுபூளை . |
| மலாஞ்சி | வெள்ளுள்ளி . |
| மலாடு | பன்னிரண்டு கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்றான திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு . |
| மலாம் | முலாம்பூசுகை . |
| மலார் | வளார் . |
| மலாரம் | வளையற்கோவை . |
| மலாவகம் | பிண்ணாக்கு . |
| மலிசம் | அரசமரம் . |
| மலிதல் | நிறைதல் ; பெருகல் ; மிகுதல் ; நெருங்குதல் ; புணர்ச்சியில் மகிழ்தல் ; செருக்குதல் ; விம்முதல் ; பரத்தல் ; விரைதல் ; விலைநயத்தல் ; சொல்லுதல் . |
| மலிபு | மிகுதி ; நிறைவு ; காதலரின் சேர்க்கை வகை ; உவகை ; நயவிலை ; தன்மை ; உயர்வு ; உத்தமம் . |
| மலிர்தல் | பெருகுதல் ; நீர் முதலியன ஒழுகுதல் ; பயிலுதல் . |
| மலிர்நிறை | பெருவெள்ளம் ; நீரூற்று . |
| மலினம் | கருமை ; மாசு ; மரவகை ; தீயகுணம் ; பாவம் ; குற்றம் ; கெடுதி ; மோர் . |
| மலினமுகன் | அக்கினி ; பிசாசு ; கருங்குரங்கு ; கொடியவன் ; கருவண்டு . |
| மலினி | தீட்டாயுள்ள பெண் . |
| மல¦மசம் | அழுக்கு ; இரும்பு . |
| மலூகம் | குருவி . |
| மலை | ஈட்டம் ; காண்க : மலைக்கட்டுக்குளம் . |
| மலைகட்டுக்குளம் | மலையடிவாரத்தில் அமைக்கப்பெற்ற குளம் . |
| மலைக்கால் | ஆட்டுக்கல் . |
| மலைக்குகை | மலையிலே தானாகவாவது குடையப்பட்டாவது அமைந்த உள்ளிடம் . |
| மலைக்குடவு | இருமலைகளின் இடைப்பட்ட பள்ளம் . |
| மலைக்குண்டுவேர் | ஒரு செடிவகை . |
| மலைக்கொடிமன்னன் | தடாதகைப்பிராட்டியின் தந்தையாகிய பாண்டியமன்னன் . |
| மலைக்கோன் | கொன்றைமரவகை . |
| மலைகலக்கி | ஒரு பூண்டுவகை . |
| மலைகுனியநின்றபிரான் | திருவேங்கடமுடையான் . |
| மலைகுனியநின்றான் | திருவேங்கடமுடையான் . |
| மலைச்சரக்கு | கருப்பூரவகை ; மலையில் உண்டாகும் மூலிகைகளிலிருந்து எடுத்த மருந்துச்சரக்கு . |
| மலைச்சார்பு | மலைப்பகுதி . |
| மலைச்சார்வு | மலைப்பகுதி . |
| மலைச்சாரல் | மலையின் சரிவான பகுதி ; மலையிற் சாரலாகப் பெய்துசெல்லும் மேகம் ; மலையில் விழும் மழை ; சாரற்காற்று . |
| மலைச்சிகரம் | மலையினுச்சி . |
| மலைத்தல் | மாறுபடுதல் ; பொருதல் ; மயங்குதல் ; வருத்துதல் ; திகைத்தல் ; வியத்தல் . |
| மலைத்தாரம் | காண்க : மலைபடுபொருள் . |
| மலைத்துவரை | ஒரு துவரைவகை . |
| மலைத்தேன் | மலையில் உண்டாகுந் தேன் ; இன்சுவையுள்ள பலாப்பழம் . |
| மலைதல் | சூடுதல் ; மேற்கொள்ளுதல் ; ஒத்தல் ; பறித்தல் ; எதிர்த்தல் ; பகைத்து மாறுபடுதல் ; மயங்குதல் ; வாதாடுதல் . |
| மலைதாங்கி | காண்க : அரிவாள்முனைப்பூண்டு ; செடிவகை ; வட்டத்திருப்பி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 854 | 855 | 856 | 857 | 858 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலர்ச்சி முதல் - மலைதாங்கி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மலையில், பூந்தாது, மலர்மிசையோன், கருவண்டு, மலரோன், செடிவகை, மலைப்பகுதி, மயங்குதல், மாறுபடுதல், பரம்பொருள், திருவேங்கடமுடையான், நடந்த, பரத்தல், தேன், மலர்மகள், மலரச்செய்தல், மிகுதல், மலர்ப்பள்ளி, மலர்தல், தாமரைப்பூவில், திருமகள், அருகன்

